Saturday, 12 September 2009

மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் துரைமுருகன் (வயது 37). மணலியில் போக்குவரத்து போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (32). இவர்களுக்கு பிரியங்கா (7), மித்ரா (6) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். புவனேஸ்வரியின் தாய் தேசம்மாள் திருத்தணி அருகே கும்பிகுளத்தில் வசித்து வருகிறார். உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வரும் இவரை சென்னைக்கு அழைத்து வந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று புவனேஸ்வரி கூறினார். இதற்கு போலீஸ்காரர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த துரைமுருகன் கோபத்துடன் வெளியில் சென்று விட்டார். இரவு நீண்டநேரம் கழித்து வீடு திரும்பினார். மனைவியும், குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது புவனேஸ்வரியின் தலையில் இரும்பு கம்பியால் துரைமுருகன் ஓங்கி அடித்தார். பின்னர் சமையல் அறைக்கு இழுத்துச்சென்று பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இதில் உடல் கருகி புவனேஸ்வரி பரிதாபமாக உயிர் இழந்தார். மனைவி பலியானதை உறுதி செய்த துரைமுருகன் குழந்தைகள் இருவரையும் ஏமாற்றி கீழே அழைத்து வந்தார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் மனைவி பால் காய்ச்சும்போது கியாஸ் கசிந்து தீவிபத்து ஏற்பட்டு விட்டது. இதில் அவர் இறந்து விட்டார் என்று நாடகமாடினார். ஆனால் அவர்கள் இதை நம்பவில்லை. உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசாரிடம் துரைமுருகன், தனது மனைவி தீவிபத்தில் பலியாகி விட்டதாக கூறினார். ஆனால் போலீசார் தீவிரமாக விசாரித்து துரைமுருகனிடம் இருந்து உண்மையை வரவழைத்தனர். மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். உடனே துரைமுருகனை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- போலீஸ்காரர் துரைமுருகனுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. கடந்த 1 வருடமாக போலீஸ் குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வருகிறார். நேற்று இரவு கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாலை 4 1/2மணி அளவில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் 2 பேரையும் அவசர அவசரமாக வாயை பொத்தி கீழே தூக்கி வந்துள்ளார். அப்போது அந்த 2 குழந்தைகளும் அம்மா எங்கே? எதற்காக எங்களை வெளியே கொண்டு வருகிறீர்கள்? என கேட்டுள்ளனர். சமையல் அறையில் புவனேசுவரி படுத்து கிடந்ததை 2 குழந்தைகளும் பார்த்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் எந்த தீவிபத்தும் ஏற்படவில்லை. வரவேற்பறையில் ரத்தம் தோய்ந்து காணப்பட்டுள்ளது. இதை குழந்தைகள் தெரிவித்தனர். அதேவேளையில் துரைமுருகன் பக்கத்து வீட்டு கதவை தட்டி வீட்டில் கியாஸ் கசித்து தீவிபத்து ஏற்பட்டு விட்டதாகவும், வீட்டில் தண்ணீர் இல்லை. தீயை அணைக்க தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளார். ஒரு வாளியில் தண்ணீர் கொடுத்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் இருந்து பெட்ரோல் மற்றும் கியாஸ் நாற்றம் அடித்துள்ளது. இதை பக்கத்து வீட்டு போலீஸ்காரர் குமார் தெரிவித்தார். இதுபற்றிய தகவல் அறிந்து ஏழுகிணறு போலீசார் வீட்டிற்குள் சென்று ஆய்வு செய்தனர். புவனேசுவரியின் தலையில் பலத்த வெட்டு காயம் இருந்தது. உடல் பாதி எரிந்த நிலையில் காணப்பட்டது. கியாஸ் சிலிண்டர் டியூப் அறுக்கப்பட்டிருந்தது. பெட்ரோல் நாற்றம் அடித்தது. சோதனையில் அவரது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டியூப் உருவிய நிலையில் இருந்தது. இந்த ஆரம்பகட்ட ஆதாரங்களை வைத்து துரை முருகனிடம் உரிய முறையில் விசாரித்தோம். அவர் உண்மையை கக்கினார். துரைமுருகனின் மாமியார் தேசம்மாள் இருதய நோயால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க புவனேசுவரி விரும்பி உள்ளார். இதற்கு துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட வாக்கு வாதத்தில் புவனேசுவரியை தாக்கி உள்ளார். அப்போது புவனேசுவரி துரைமுருகனை கேவலமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த துரைமுருகன் இன்று அதிகாலையில் புவனேசுவரி தூங்கிக்கொண்டிருந்தபோது தடியால் அடித்து கொலை செய்துள்ளார். அதை மறைப்பதற்காக புவனேசுவரியை இழுத்து கொண்டு சமையல் அறையில் போட்டுள்ளார். குழந்தைகள் பார்த்து விடக்கூடாது என்பதற்காக வெளியே கொண்டு விட்டுள்ளார். பின்னர் வண்டியில் இருந்து பெட்ரோலை பிடித்து சென்று புவனேசுவரி உடலில் ஊற்றி தீவைத்துள்ளார். கியாஸ் கசிந்து தீவிபத்து நடந்ததுபோல் இருக்க வேண்டும் என்பதற்காக கியாஸ் டியூப்பை வெட்டி உள்ளார். ஆனால் தடயவியல் சோதனையிலும், குழந்தைகளின் சாட்சியாலும் துரைமுருகன் சிக்கிக்கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.