இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
மெரீனா கடற்கரைக்கு சுற்றுலா வந்த கொல்கத்தா வைர வியாபாரி மனைவி திடீரென மாயமானார். ஆள் கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
கொல்கத்தாவை சேர்ந்தவர் ஜெய்சுவால் (26). வைரவியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா (23) இருவருக்கும் இடையே கடந்த ஏப்ரல் 17-ந் தேதி திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின்னர் குடும்பத்துடன் இளம் தம்பதியினர் கடந்த 29-ந்தேதி சுற்றுலா புறப்பட்டனர். திருப்பதி, கன்னியாகுமரி, சென்று திரும்பிய அவர்கள் சம்பவத்தன்று சென்னையில் மியூசியம், கிண்டி சிறுவர் பூங்கா போன்ற இடங்களுக்கு சென்று விட்டு மாலை 6.45 மணிக்கு மெரீனா கடற்கரைக்கு வந்தனர்.
கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பிரியா மட்டும் கடற்கரை மணலில் நடந்து சென்றார். அவரை கணவர் ஜெய்சுவால் அழைத்தார். அப்போது வாலிபர்கள் சிலர் கும்பலாக சென்றனர். அதற்குள் பிரியாவை காணவில்லை. கூட்டத்துடன் கலந்து வழி தெரியாமல் சென்று விட்டாரா? என கடற்கரை முழுவதும் தேடினார். பிரியா கிடைக்கவில்லை. அவர் எங்கு போனார் என்ன ஆனார் என்பது தெரிய வில்லை.
இதுகுறித்து மெரீனா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கமலக் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். இதற்கு முன் சென்னை வந்திராத பிரியா தனியாக சென்னையில் எங்கும் செல்ல வாய்ப்பில்லை. எனவே யாராவது மர்ம நபர்கள் பிரியாவை கடத்தி சென்றனரா? என்ற கோணத்தில் போலீசார் விசா ரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதற்கிடையே சுற்றுலா வந்த இடத்தில் பிரியாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே கணவர் ஜெய்சுவாலின் செல்போன் மூலம் போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.