Tuesday, 8 September 2009

லண்டனில் இந்திய முஸ்லீம் மீது இனவெறி தாக்குதல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
லண்டனில் இந்திய முஸ்லீம் ஒருவர் மீது நடத்தப்பட்ட இனவெறி தாக்குதலில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த ஏக்ராம் ஹக்கி என்ற 57 வயது முதியவர் லண்டனில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இரவு இவர் தனது நான்கு வயது பேத்தியுடன் வடமேற்கு லண்டனிலுள்ள மசூதி ஒன்றில் ரமலான் தொழுகையை முடித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். லிப்ட்டுக்காக அவர் காத்திருந்தபோது அவரது பின்னால் ஓடி வந்த கும்பல் ஒன்று அவரது தலையில் தடியால் பலமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டது. இதில் பலத்த காயமடைந்த ஹக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உயிர் பிழைப்பது கடினமே என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் இனவெறி தாக்குதலே என்று கூறியுள்ள போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.