Saturday, 24 March 2012

ஆபாசப்பட விவகாரம்: குறுந்தகடை வெளியிட்டது காங்கிரஸ்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கடந்த சில திகதிகளுக்கு முன்பு குஜராத் மாநில சட்டப்பேரவையில் ஆபாசப்படம் பார்த்ததாக பா.ஜ.க உறுப்பினர் இருவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
பின்னர் இதுகுறித்த விசாரணைக்கு சட்டப்பேரவை சபாநாயகர் உத்தரவிட்டார்.
விசாரணையின் முடிவில் தடயவியல் நிபுணர்கள், உறுப்பினர் ஆபாசப்படம் பார்க்க வில்லை என்று கூறினர். இதை சபாநாயகரும் உறுதிபடுத்தினார்.
ஆனால், காங்கிரஸ் இந்த விவகாரத்தை துருவ ஆரம்பித்தது. இதன் அடிப்படையில் பா.ஜ.க உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் ஆபாசப்படம் பார்த்ததாக காங்கிரஸ்குழு தலைவர் அர்ஜுன் மோத்வாயா தெரிவித்துள்ளார்.
இதற்கு ஆதாரமாக பாஜக உறுப்பினர்கள் படம் பார்க்கும் போது எடுத்த குறுந்தகடையும் வெளியிட்டுள்ளார்கள்.
இதுகுறித்து அர்ஜுன் மோத்வாயா கூறியதாவது, குஜராத்தில் பா.ஜ.க ஆளும் கட்சியாக இருப்பதால் இந்த விவகாரத்தை மூடி மறைக்கப்பார்த்தார் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி.
இருப்பினும் காங்கிரஸின் விடாமுயற்சியால் நாங்கள் இதை கண்டுபிடித்து விட்டோம் என்றும் குற்றவாளிக்கு விரைவில் தண்டனை வாங்கித்தருவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments: