Saturday, 24 March 2012

நாட்டுக்கு எதிராக எழுதும் ஊடகவியலாளர்களின் கை, கால் உடைக்கப்படும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வெளிநாடுகளுக்குச் சென்று எமது நாட்டுக்கு எதிராகக் கருத்துகளைக் கூறும் ஊடகவியலாளர்கள்
நாட்டுக்குள் கால்வைத்தால் அவர்களின் கை, கால்களை உடைப்பேன் என்று பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

 
போத்தல ஜயந்த என்னும் ஊடகவியலாளரை நான் தான் இந்த நாட்டிலிருந்து துரத்தினேன். இத்தகைய ஊடகவியலாளர்கள் நாட்டுக்குள் கால்பதித்தால் அவர்களின் கை, கால்கள் அடித்து உடைக்கப்படும் எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்தார்.
 
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று கிரிபத்கொடையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
 
அவர் மேலும் தெரிவித்ததாவது:
சிகிரியாவிலிருந்து சுனாமி வந்தாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து எனக்கெதிராகச் சுனாமி வராது. மஹிந்த ராஜபக்ஷ மாத்திரமே என்னை பதவியிலிருந்து விலக்க முடியும். வேறு எவரும் என்னில் கைவைக்க முடியாது. அது நடக்கும்வரை நான் களினியிலிருந்து செல்ல மாட்டேன்.
 
டீ.ஏ. ராஜபக்ஷவின் புதல்வர்களை அவர்கள் சிறுபிள்ளைகளாக இருந்த காலத்தில் இருந்தே நான் அறிவேன். நாட்டின் மன்னரை நான் நேசிக்கின்றேன். இந்த நாட்டின் மன்னர் என்னை நம்புவார்.
 
நான் இறப்பதற்கு அஞ்சவில்லை. கொழும்பிலுள்ள போதைப்பொருள் விற்பனையாளர்கள் இருவர் என்னை துரத்துவதற்கு முயற்சித்தனர். எனது உயிருக்கு ஏதேனும் நடந்தாலும் எனது மனைவியும் இரு பிள்ளைகளும் அங்கேயே இருப்பர். இன்று முதல் எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.  என்றார் மேர்வின் சில்வா. 

0 comments: