Wednesday, 25 January 2012

தமிழக அரசின் திட்டங்கள் கசிவு யார் காரணம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழக அரசின் பல்வேறு முக்கிய முடிவுகளில் குழப்பங்கள் ஏற்படுவதற்கு
அது தொடர்பான முக்கியத் தகவல்கள் வெளியில் முன்கூட்டியே கசிவதுதான் என்று கோட்டை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இந்த முக்கியத் தகவல்களை தலைமைச் செயலகத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள மூன்று முக்கிய அதிகாரிகள்தான் கசிய செய்கிறார்கள் என்றும் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது.
வ, பெ மற்றும் அ’ என்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயர் கொண்ட இந்த மூன்று முக்கிய அதிகாரிகள்தான் பல முக்கியத் தகவல்களை வெளியில் அதாவது ஒரு முக்கிய கட்சியின் தலைமைக்கு கசியச் செய்வதாகவும் கூறுகிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.
இந்த மும்மூர்த்திகளில் இருவர் பெண் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று பேரும்தான் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பிரத்தியேக உதவியாளர், கார் ஓட்டுனர்கள் உள்ளிட்டோரை நியமிக்கும் பொறுப்பில் இருப்பவர்களாம். இவர்கள் சொல்லும் நபர்கள்தான் பிரத்தியேக உதவியாளர்களாகவோ அல்லது ஓட்டுனர்களாகவோ ஆக முடியுமாம்.
எனவே ஒரு முக்கிய கட்சி இந்த மூன்று பேரையும் தனக்கு சாதகமாக மடக்கியுள்ளதாம். இவர்கள் மூலம் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை பிரத்தியேக உதவியாளர் மற்றும் ஓட்டுனர்களாக அது முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளிடம் இரகசியமாக நியமனம் செய்துள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதன் மூலம் அரசின் அன்றாட நடவடிக்கைகள், அமைச்சர்களின் நடவடிக்கைகள், அதிகாரிகளின் முக்கிய நடவடிக்கைகளை அவர்கள் உளவு பார்த்துச் சொல்கிறார்களாம்.
இதனால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசின் செயல்பாடுகள் குறித்து என்னென்ன தகவல் தெரியுமோ அது அத்தனையும் அந்தக் குறிப்பிட்ட கட்சியின் தலைமைக்கும் முன்கூட்டியே போய் விடுகிறதாம். பல முக்கிய தகவல்களையும் முதல்வருக்கு முன்பாகவே அந்தக் கட்சியின் தலைமை வாங்கி விடுகிறதாம்.
அதை விட உளவுத் துறைக்குத் தகவல் கிடைப்பதற்கு முன்பே அந்தக் கட்சியின் தலைமைக்குத் தகவல் போய் விடுகிறது என்கிறார்கள் கோட்டை தரப்பினர். முதல்வருக்கு வெகு அருகே இருந்தபடிதான் இந்த மூன்று உயர் அதிகாரிகளும் பணியாற்றுகிறார்கள். ஆனால் இதுவரை இவர்கள் குறித்து முதல்வருக்குத் தெரியாமல் இருப்பது குறித்து தலைமைச் செயலக ஊழியர்கள் பெரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகி றார்கள்

0 comments: