Tuesday, 17 January 2012

தேர்தல் பிரசாரத்தில் கொலைவெறி பாடல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் பாடியுள்ள கொலை வெறி பாட்டை உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்த
காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
உத்திர பிரதேச தேர்தலில் கொலைவெறி பாடலை பயன்படுத்த திட்டமிட்டுள்ள காங்கிரஸ் கட்சி பாடலின் உரிமையை வாங்க நடிகர் தனுசுடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வடக்கே உள்ள இந்தி பத்திரிகைகளில் தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் கொலைவெறி பாடலுக்கான உரிமையை வழங்க தனுஷ் மறுத்ததாகவும் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்பப்பர் தனுசுடன் பேச்சு நடத்தி சம்மதிக்க வைத்ததாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது குறித்து நடிகர் தனுஷ், கொலைவெறி பாடலின் உரிமையை காங்கிரஸ் வாங்குகிற முயற்சி தனக்கு தெரியாது. சோனி நிறுவனத்திடம் தான் கொலை வெறி பாடல் உரிமை உள்ளது.
அவர்களுடன் பேசினார்களா? என்பது தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார். அரசியல் கட்சி தேர்தல் பிரசாரத்தில் கொலை வெறி பாட்டை பயன்படுத்துவதில் உங்களுக்கு உடன்பாடு தானா? என்று தனுசிடம் கேட்ட போது, அது அரசியல் பாட்டு அல்ல என்று பதில் அளித்தார்.
இதற்கு முன்பு ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய ஜெய் ஹோ பாடலை ராகுல் காந்தியை முன்னிறுத்த பயன்படுத்தினர்.
தற்போது கொலை வெறி பாட்டில் நல்லாட்சி, மதசார்பின்மை போன்றவற்றை வலியுறுத்த உள்ளனர். அதற்கான பொருத்தமான வார்த்தைகளை கொலை வெறி மெட்டில் பயன்படுத்துகின்றனர்.

0 comments: