இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ஸ்வான் நிறுவனத்துக்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம், கொடுத்ததற்காக
ஸ்வானின் துணை நிறுவனமான ‘சினியுக்’ மூலம் 200 கோடி ரூபாய் அளவுக்கு கலைஞர் தொலைக்காட் சிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சி.பி. ஐ. புகாரில் தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்த இலஞ்சப் பணம் நேரிடையாக தராமல் கடன் என்றும், பங்குத் தொகை என்றும் டைனமிக்ஸ் ரியாலிட்டி, கான்வுட் கன்ஸ்டிரக்ஷன் அண்ட் டெவலப்பர்ஸ், நிகார் கன்ஸ்டிரக்ஷன், டி. பி. ரியாலிட்டி, எவர்ஸ்மைல் கன்ஸ்டிரக்ஷன் ஆகிய நிறுவனங்கள் மூலம் தரப்பட்டுள்ளது. ஊழலுக்கு துணையாக இருந்த இந்த நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என அமுலாக்கப் பிரிவு, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு நீதிமன்றத்தில் கோரியிருந்தது. கலைஞர் தொலைகாட்சிக்கு 200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில் ஐந்து நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட உள்ளன.
இதையடுத்து, அனைத்து தரப்பு வாதத்தை கேட்டபின், இந்த நீதிமன்றம் மேற்கண்ட ஐந்து நிறுவனங்களின் 223 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து டைனமிக்ஸ் ரியாலிட்டியின் 134 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்து, கான்வுட் கன்ஸ்டிரக்ஷன் அண்ட் டெவலப்பர்சின் 22 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து மற்றும் நிகார் கன்ஸ்டிரக்ஷனின் ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள சொத்துக்களும், டி. பி. ரியாலிட்டியின் 52 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும், எவர்ஸ்மைல் கன்ஸ்டிரக்ஷனின் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் உட்பட 223 கோடி ரூபாய்க்கு பறிமுதல் செய்யப்பட உள்ளன.
0 comments:
Post a Comment