Saturday 24 March 2012

தனி ஈழத்துக்கான பிரபாகரன் போராட்டம் தவறானது என்று கூறும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தனி ஈழத்துக்கான பிரபாகரன் போராட்டம் தவறானது என்று கூறும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. அவர் போராட்டம் சரியானதே. ஆனால் சகோதரச் சண்டை தான் தமிழ் ஈழம் அமைவதைக் கெடுத்தது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்வி, தமிழ் ஈழம் பற்றியதுதான். அதற்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு;
ஈழத்தில் நடந்த சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது என்பது என் கருத்து என்றார் கருணாநிதி.
அப்போது, புலிகள் நடத்திய சகோதர யுத்தம் தவறானது என்று சொல்கிறீர்கள். தந்தை செல்வா போன்றோர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் தமிழர்கள் மீது அத்துமீறல்கள் நடந்தன. அதனால்தான் நாங்கள் போராடத் தொடங்கினோம் என்று பிரபாகரன் சொல்லியிருந்தாரே? அது தவறா? என்று ஒரு நிருபர் கேட்டார்.
உடனே பதிலளித்த கருணாநிதி, பிரபாகரன் போராட்டத்தைக் குறை கூறும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல. அவர் முன்னெடுத்த போராட்டம் சரியானதே. அதை தி.மு.க.வும் ஆதரிக்காமலில்லை. புலிகள் நடத்திய சகோதர யுத்தம் என்று நான் சொன்னது அவர்களைப் பற்றி மட்டுமே அல்ல.
ஆனால் பிரபாகரனும் முகுந்தனும், பத்மநாபாவும், ஸ்ரீசபாரத்தினமும் மோதிக் கொண்டு அதில் இரத்த ஆறு ஓடியதைத்தான் நான் மிகுந்த வேதனையோடு அப்போதும் தடுத்தேன். இப்போதும் அந்த நிலை வரக்கூடாது என்று வேண்டுகிறேன்.

0 comments: