Sunday 4 March 2012

திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் ரூ. 2010 கோடி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
திருப்பதி கோயிலில் பல்வேறு இனங்களின் வரவு- செலவுகள் மூலம் இந்தாண்டு ரூ. 2010 கோடி வருவாய்
ஈட்டி சாதனை படைத்துள்ளதாக பட்ஜெட் தாக்கலின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில், திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் சார்பில் 2012-2013-ம் ஆண்டிற்கான வருடாந்திர பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்‌ஜெட்டில் முதல்முறையாக ரூ. 2010 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதற்கான ஒப்புதலை தேவஸ்தான வாரியம் அளித்தது. திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் ‌தேவஸ்தான தலைவர் கே. பப்பிராஜூ,நிர்வாக அதிகாரி எல்.வி. சுப்ரமணியம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பதி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 800 கோடியும், இதனை வங்கியில் டிபாசிட் வைத்ததன் மூலம் வட்டியாக ரூ. 475 கோடியும், கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை (2010-2011) விட ரூ. 70 கோடி அதிகமாகும். பக்தர்கள் அளித்த தலைமுடி காணிக்கை விற்பனை மூலம் ரூ. 145 கோடியும், ஆர்ஜிதசேவை டிக்கெட்டுகள் விற்பனை மூலம் ரூ. 43 கோடி மற்றும் இதர வருவாய் இனங்கள் மூலம் ரூ.72.50 கோடியும் வசூலாகியுள்ளது. மேலும் பிரசாதம் விற்பனையில், முக்கியமாக லட்டு விற்பனையில் இந்தாண்டு ரூ.137.5 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றை தவிர இந்தாண்டு வி.‌ஐ..பி.கள் சிறப்பு தரிசன டிக்கெட் சிறப்பு தரிசனம் உள்ளிட்ட பல்வேறு தரிசனங்கள் வாயிலாக டிக்கெட்டுகள் விற்பனை மூலம் ரூ.169 கோடியும், வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் டோல்கேட் வரி, மற்றும் ஷாப்பிங் கடைகள், ‌ஹோட்டல்கள் ஆகியவற்றின் மூலம் 92.56 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.
செலவினங்களாக , ‌கோயிலின் உள்கட்டமைப்பு முதலீடுகளாக ரூ.533.7 கோடியும், ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்டவைகளுக்காக ரூ.336 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments: