Saturday 24 December 2011

ஜெயா அதிகார மையம் மாற்றம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழ்நாட்டில் அதிமுக தலைவி ஜெயலலிதா ஆட்சியின் அதி கார மையம் இடமாறி இருப்ப தாகத் தெரிவிக்கப்பட்டுகிறது
.
இதுவரை ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் முதல்வரின் தோழி சசிகலாவின் கைகளில் மையம் கொண்டு இருந்த அந்த மையம், இப்போது ஜெயலலிதாவின் இப்போதைய அரசியல் ஆசான் என்று வர்ணிக்கப்படும் துக்ளக் சோவிடம் குடிகொண்டு இருப்ப தாகத் தெரிகிறது.
திரு சோவின் வீட்டுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் சோ-ஜெயலலிதா இருவரும் விரும்பியபோது தொடர்புகொள்ள ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் இடம் பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் நாட்டில் மொத்தம் 234 இடங்களைக் கொண்ட சட்ட மன்றத்தில் 148 பேரைக் கொண்டு அசுர பலத்துடன் முதல்வராகக் கடந்த மே மாதம் பொறுப்பு ஏற்ற ஜெயாவின் ஆட்சி பல கோணங் களிலும் குறைகூறப்படுகிறது.
ஆட்சி குறைபாடுகளுக்கு சசிகலாவின் அளவுக்கு மீறிய நிர்வாகத் தலையீடுதான் காரணம் என்றும் அதனால் அவரை முற்றாக ஜெயலலிதா ஒதுக்கிவிட்டார் என்றும் பரவலாகக் கூறப்படுகிறது.
ஆனால் சசிகலாவை கூண் டோடு விலக்கிவிட்டதாகத் அறிவித்த ஜெயலலிதா, ஏன், எதற்கு என்று ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை. சசிகலாவும் இருக்குமிடம்கூட தெரியாத அள வுக்கு அமைதியாக இருக்கிறார்.
இதன் காரணமாகத் தகவல் சாதனங்கள் தங்கள் விருப்பம்போல் பல யூகங்களை வெளியிடுகின்றன.
சசிகலாவை விலக்கி வைக்க குஜராத் முதல்வரும் ஜெயலலிதா வின் மரியாதைக்கு உரிய தலைவர் களில் ஒருவருமான மோடியும் தமிழ்நாட்டில் துக்ளக் இதழை நடத்திவரும் சோவும் முக்கிய காரணங்கள் என்று தெரிவிக்கப் படுகிறது.
சகிகலாவைத் தவிர யாரும் நெருங்க முடியாத ëஜய லலிதாவைத் திரு மோடி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தொடர்புகொண்டு காய்களை நகர்த்தினார் என்று கூறப்படுகிறது.
என்றாலும், ஜெயா-சசி இரு வரும் வழக்கம்போல் நாடகம் போடுவதாகவும் நீதிமன்ற வழக்குகள், நிர்வாகக் குளறுபடிகள் எல்லாம்தான் அதற்குக் காரணம் என்றும் சில தரப்புகள் தெரிவிக்கின்றன.

0 comments: