Thursday 15 December 2011

நூற்றுக்கணக்கான காய்கறி லாரிகள் அடித்து நொறுக்கப்பட்டன

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை கோயம்பேடு ஈரச் சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளி
சக்கரவர்த்தி (30) மற்றும் ஆதிமூலம் (24) ஆகியோர் மீது காய்கறி ஏற்றி வந்த லாரி ஒன்று மோதியது.
இதனால் கொதிப்படைந்த தொழிலாளிகள் ஆயிரக் கணக்கானோர் ஒன்றிணைந்து கோயம்பேடு சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றும் காய்கறிகளை ஏற்றி வந்த நூற்றுக் கணக்கான லாரிகளை அடித்து நொறுக்கி சேதமடையச் செய்தனர்.
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கோயம்பேடு சந்தைக்கு வரும் லாரிகள் யாவும் உள்ளே நுழைய முடியாமலும் ஏற்கனவே வந்து சேர்ந்த லாரிகள் சரக்குகளை இறக்க முடியாமலும் லாரி ஒட்டுநர்கள் தவிப்புக்கு உள்ளாகினர்.
இதனால் 500 டன் காய்கறிகள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காய்கறிகள் ஏற்றிக் கொண்டு வந்த சிறு வாகனங்களைத் தொழிலாளர்கள் கவிழ்த்தனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலிசார் தடியடி நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்

0 comments: