Thursday 15 December 2011

பிள்ளைகளுக்கு குறைந்தது 9 நேரம் தூக்கம் தேவை ஆய்வாளர்கள் கருத்து

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு குறைந்தது 9 நேரம் தூக்கம் வேவை, இல்லாவிட்டல்
அவர்களுடைய கற்றல் ஆற்றல் குறைவடையும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பார்சலோனா ஓட்டோணமஸ் பல்கலைக்கழகத்தால் பிள்ளைகளின் தூக்கத்திற்;கும் அறிவார்ந்த அபிவிருத்திக்கும் இடையிலுள்ள தொடர்பு பற்றி ஆராயப்பட்டது.
அதில் குறைவான தூக்கம் கற்றலுக்குத் தேவையான முக்கிய திறனை பாதிக்கின்றது என கண்டுபிடித்துள்ளனர்.
பிள்ளைகளின் நலன்களுக்கு தூக்கம் அத்தியவசியமானது என பெற்றோர்களுக்கு விளக்கப்பபட வேண்டும் என ஆய்வாளர்கள் யோசனை கூறியுள்ளனர்
தினமும் 8-9 நேரம் தூக்கம்  கொள்ளும் பிள்ளைகள் கூட, 9 -11 நேரம்  தூக்கம் கொள்கிறவர்களிலும் பார்க்க பாடசாலையில் அதிகம் திண்டாடலாம் என அவர்கள் ஆய்வில் இருந்து தெரியவந்திருக்கிறது.
9 மணித்தியால தூக்கம் வேண்டும் என்ற இந்த ஆரம்ப-நிலை, 142 ஆறு வயதிலிருந்து இருந்து ஏழு வயதினரின் தூக்க பழக்கத்தை அடிப்படையாக வைத்து ஆராய்ந்து பெறப்பட்டதாகும்.
தூக்கம் குறைவு அல்லது ஒழுங்கான தித்திரை கொள்ளும் நடைமுறை இல்லாமை என்பன பிள்ளைகளின் ஞாபகசக்தி, கற்றல், ஊக்கம் என்பனவற்றை தகர்த்தெறிகிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
குறைவான தூக்கம் பிள்ளைகளின் மொழி அறிவு, இலக்கணம், ‘எழுத்துக்கூட்டுதலின் விதி’ போன்றவற்றின் செயல்திறனை திரித்துக்கூறுகின்றன என்கிறார் உளவியல் துறை ஆய்வாளர் றோமன் கிளெடெல்ஸ் அவர்கள்.
பிள்ளைகள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் பிரச்சினைகளை எதிர்கொண்டால் அது மற்றய பாடங்களின் அபிவிருத்தியையும் பாதிக்கும். ஆகவே பிள்ளைகள் போதிய அளவு தூக்கத்தை பெறுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது அவசியமானதாகும். அமெரிக்காவின் மிச்சிக்கன் பல்கலைக்கழகத்தில் அண்மையில் செய்த ஆய்வில், பாடசாலையில் அடாவடியர்களாகவும் வலியச் சண்டை செய்ய முனைபவர்களாகவும் இருக்கும் மாணவர்களுக்கு பெரும்பாலும் நித்திரை குறைவாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
பின்லாந்தில் 7-8 வயதினரிடையே நடத்திய ஆய்வில் நித்திரை குறைந்தவர்களின் நடத்தை  கவனம்-பற்றாக்குறை-மிகஇயக்கம் உள்ள பிள்ளைகளின் நடத்தைபோல் இருக்கும் என கண்டறிந்துள்ளனர்.
எட்டு மணித்தியாலத்திற்கு குறைவாக தூங்கும் பிள்ளைகள் சீர்குலைப்பு நடத்தை கொண்டவர்களாக இருக்க சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

0 comments: