Wednesday 14 December 2011

விக்ரமின் ராஜபாட்டை 23 ரிலீஸ்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
விக்ரம் நடிப்பில், சுசிந்திரன் இயக்கியிருக்கும் 'ராஜபாட்டை' திரைப்படம் வரும் 23ஆம் தேதியன்று வெளியாகிறது.பிரசாத் வி பொட்டலூரி தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் நான்காவது படமான இப்படத்தில் 'ஜிம் பாய்' கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன், காமெடிப் படமக உருவாகியிருக்கும் இந்த படத்தில் தீக்ஷா சேத் நடிக்க, ஒரு பாடலுக்காக மட்டும் ஸ்ரேயா மற்றும் ரீமா சென் நடனம் ஆடியிருக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் ராஜபாட்டை படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, வெளியாக தயாராகும் இருந்த ராஜபாட்டை படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்திற்கு 'யு'சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று உலகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது

0 comments: