Sunday 13 November 2011

மீண்டுமொரு போருக்கு தயாராக வெளிநாடுகளிலுள்ள புலிகள் முனைப்பு!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மாலைதீவில் சார்க் மாநாட் டில் பங்கேற்க வந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைக்காட்சி நிருபருக்கு அளித்துள்ள பேட்டியில் முதல்வர் ஜெ.
இலங்கைக்கு வரட்டும் அங்கு என்ன நடக் கிறது என்ற பணிகளை அவர் பார்க்கட்டும் அவரை வரவேற் கிறோம் என்றார்.
மேலும் அவர் அளித் துள்ள பேட்டியில்; புலிகள் மற்றும் இவரது ஆதர வாளர்கள் வெளி நாடுகளில் பணம் வசூலித்து வருவதாகவும், மேலும் ஒரு போருக்கு தயாராக இருப்ப தாகவும் இது குறித்து எங்களிடம் சரண் அடைந்துள்ள புலிகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. புலிகளின் அச்சுறுத்தல் இருக் கத்தான் செய்கிறது. புலிகள் மீண்டும் உயிர்ப்பித்து விடுவார்களோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்கிறது. நாங்கள் கண் காணித்து தான் வருகிறோம்.
தமிழர்கள் குடியமர்த்துதல் தொடர்பாக இந்தியா மற்றும் உலக நாடுகள் வந்து பார்த்துக் கொள்ளலாம். ஜெ, வை வர வேற்பீர்களா என்று கேட்டதற்கு தாராளமாக அவர் வரட்டும், அவரை வரவேற்கிறோம். இங்கு என்ன நடக்கிறது என்பதை அவரே நேரில் தெரிந்து கொள்ளட்டும் என்றார்.
இலங்கை சீனா உறவின் காரணமாக இந்திய உறவில் பாதிப்பு வருமா என்று கேட்ட போது, இந்தியா எங்களின் தொப்புள் கொடி உறவு என்றார். இந்தியா எங்களுடைய உறவினர், சீனா எங்களுடைய நண்பர் இவ்வாறு கூறி முடித்துக் கொண்டார்.