Saturday 12 November 2011

ராசா கோரிக்கையை நிராகரித்த நீதிபதி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அலைக்கற்றை ஊழல் விவகாரம் குறித்து சாட்சிகள் விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னி லையில் நேற்று
தொடங்கியது. முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, திமுக மேலவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாயினர். அப்போது ராசாவின் சார்பில் அவரது வழக்கறிர் சுஷில் குமார் நீதிபதியிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவில், 2ஜி அலைக் கற்றை விவகார வழக்கில் 2009ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி முதல் சிபிஐ தனது விசாரணையைத் தொடங்கியது. அந்த விசாரணை முடிந்து, அனைத்து வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்ட பின்னர்தான் சாட்சிகளை குறுக்கு விசா ரணை செய்யமுடியும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், லூப் டெலிகாம் மீதான விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை என சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தெரி வித்துள்ளது. எனவே அந்த விசாரணை முடிவடையும் வரை ராசா அரசுத் தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்பவில்லை எனவும், குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதான விசாரணை முடிவடைந்து விட்டதா என்று சிபிஐயிடம் நீதி மன்றம் விளக்கம் கேட்க வேண்டும் எனவும் தமது மனுவில் ராசா கோரியிருந்தார். அந்த மனுவுக்கு அரசுத் தரப்பு வழக்கறிர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், நீதிபதி அதனை நிராகரித்தார். அதன் பின்னர் சாட்சிகளிடம் விசா ரணை தொடங்கியது. இந்த வழக்கில் மொத்தம் 150 பேர் சாட்சிகளாக சேர்க்கப் பட்டுள்ளனர். அவர்களில் 28 பேரிடம் இம்மாதம் விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப் பட்டது. இந்த 28 பேரில் 11 பேர் ரிலையன்ஸ் நிறுவன அதிகாரி கள். மற்றவர்கள் ஸ்வான் டெலிகாம், டிபி ரியாலிட்டி அதிகாரிகள். ரிலையன்ஸ் கேபிடல் நிறு வனத்தின் ஆனந்த் சுப்பி ரமணியம் முதலில் சாட்சியம் அளித்தார். எடிசலாட் டிபி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஸ்வான் டெலிகாமை மையப் படுத்தி, அதன் பெயரில் முறைகேடாக அலைக்கற்றை பெற ரிலையன்ஸ் நிறுவனம் முயன்றதாக சிபிஐ குற்றம் சாட்டியது. ராசா, கனிமொழி, முன்னாள் தொலைத் தொடர்புச் செய லாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் முன்னாள் தனி உதவியாளர் ஆர்.கே. சந்தோ லியா, கலைர் டிவி நிர்வாக இயக்குநர் சரத் குமார் ரெட்டி உள்ளிட்ட 14 தனி நபர்கள் மீதும், ரிலையன்ஸ் கம்யூனி கேஷன், யுனிடெக் வயர்லெஸ் பிரைவேட் லிமிடெட் (தமிழ்நாடு), ஸ்வான் டெலிகாம் ஆகிய 3 நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிலர் மீது நம்பிக்கை துரோக குற்றச் சாட்டுகளும் சுமத்தப் பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப் பட்டால் அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

0 comments: