Saturday 5 November 2011

அனைவருக்கும் பக்ரித் (ஹஜ்) பெருநாள் நல் வாழ்த்துகள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
முழுஉலக மக்களாலும் கொண்டாடப் படுவது ‘ஈதுல் அழ்ஹா’ எனப்படும் தியாகத் திருநாள்
. உண்மையில் இதனை பெருமைக்குரிய திருநாள் என்றழைப் பதும் பொருத்தமாகும். ஏனெனில், அத்தகைய பெருமைக்குரிய ஒரு வரலாற்றை அல்லாஹ்வின் தோழர் ஹஸ்ரத் இப்றாஹீம் (அலை) அவர்கள் உருவாக்கிச் சென்றார்கள்.
ஆடு, மாடு, ஒட்டகங்களைப் பலியிட்டு ஆண்டு தோறும் செய்யப்படும் ‘குர்பானி’ ஹஸ்ரத் இப்றாஹீம் (அலை) அவர்களின் அந்த மகத்தான தியாகத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
குர்பானி’ அல்லாஹ்வின் சந்நிதானத்தில் அடியார்கள் செலுத்தும் சிறந்த ஒரு வணக்கமாக எல்லா நபி மார்களுடைய கூட்டத்தார் மீதும் கடமையாக்கப்பட்டு வந்துள்ளதை கீழ்வரும் அல்குர்ஆன் வசனம் குறிப்பிட்டும் காட்டுகின்றது. அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்திருந்த ஆடு, மாடு, ஒட்டகைகள் மீது அவன் பெயரைக் கூறும் படி செய்வதற்காகவே ஒவ்வொரு வகுப்பாருக்கும் நாம் ‘குர்பானி’ செய்வதை கடமையாக ஏற்படுத்தி இருந்தோம் (அல்-குர்ஆன் 22:34)
குர்பானிக்கு ஏற்ற மிருகங்கள் நன்கு கொழுத்ததாகவும் ஆரோக்கியமுடையதாகவும் இருத்தல் வேண்டும். இதைத் தான் பின்வரும் நபி மொழி எடுத்துக் காட்டுகின்றது. கொழுத்த மிருகங்களையே குர்பான் செய்யுங்கள். ஏனெனில் அவை ஸிராதுல் முஸ்தகிம் பாலத்தில் உங்களுடைய வாகனமாக உதவு பவை. (அல்-ஹதீஸ்)

0 comments: