Tuesday 13 September 2011

மும்பை மாநகராட்சி துணைஆணையர் கைது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஒரு ஒப்பந்ததாரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற மும்பை மாநகராட்சியின் துணை ஆணையர் நேற்று கைது செய்யப்பட்டார். மும்பை மாநகராட்சியில் ஆக்கிரமிப்புக்களை அகற்றும் பிரிவில் துணை ஆணையராக இருந்து பணியாற்றி வருபவர் சந்திரசேகர் ரோகேட். இவரது துணையில் 9 கோடி கான்டிராக்ட் ஒன்றை எடுத்த ஒரு ஒப்பந்ததாரரிடம் அதற்கான பில்களை செட்டில் செய்ய ரூ. 1 லட்சத்தை துணை ஆணையர் சந்திரசேகர் ரோகேட் லஞ்சமாக கேட்டுள்ளார். இது குறித்து அந்த ஒப்பந்ததாரர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதை அடுத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த துணை ஆணையருக்கு கண்ணி வைத்தனர்.
துணை ஆணையாளரின் அலுவலகத்திற்கு சென்ற அந்த ஒப்பந்ததாரர் ரூ. 1 லட்சம் லஞ்சப்பணத்தை  துணை ஆணையர் சந்திரசேகர் ரோகேட்டிடம்  கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சந்திரசேகர் ரோகேட்டை கையும் களவுமாக கைது செய்தனர்.
இதை அடுத்து துணை ஆணையர் ரோக்கேட் மீது  லஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 comments: