Wednesday 14 September 2011

கனிமொழிக்காக விழாவைத் தள்ளி வைத்த கருணாநிதி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஸ்பெக்ட்ரம் வழக்கில் இன்னும் இரண்டொரு நாளில் திருப்பு முனை நிகழவிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாளை மறுதினம் 15ம் தேதி இவ்வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகையை மத்திய புல னாய்வுத் துறை தாக்கல் செய்ய வுள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில் ராசாவுக்கும், கனிமொழிக்கும் பாதகமான அம்சங்கள் இடம் பெறக்கூடுமோ என்ற பதைபதைப் பில் திமுக உள்ளது. இப்படியொரு இக்கட்டான சூழலில், மகிழ்ச்சிக்குரிய நிகழ்வு களை அந்தக் கட்சி தவிர்த்து வருகிறது. திமுக தோற்று விக்கப்பட்ட நாள், அண்ணாதுரை பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் ஆகிய மூன்று சம்பவங்களைக் கொண்டாடும் முப்பெரும் விழா திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக் கம். பெரும்பாலும், அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி இந்த முப்பெரும் விழா நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி வேலூரில் அவ்விழா நடை பெறுமென முதலில் அறிவிக்கப் பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வந்தன. ஆனால், தற்போது அந்த விழா இம்மாதம் 30ம் தேதி சென்னையில் நடக்கும் என திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தத் திடீர் மாற்றத்துக்கான காரணம் திமுகவின் முக்கிய தலைவர்களுக்கு மட்டுமே தெரி விக்கப்பட்டுள்ளது. வருகிற 15ம் தேதி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுவிட்டால், அதன்பிறகு கனி மொழிக்கு பிணை கிடைக்க வழி கிடைக்கும் என்று சட்ட வல்லுநர்கள் திமுக தலைமையி டம் சொல்லியிருக்கிறார்களாம். சிபிஐ தாக்கல் செய்ய விருக்கும் மூன்றாவது குற்றப் பத்திரிகை கனிமொழிக்கு பாதக மில்லாத வகையில் இருக்கு மானால், அவரை பிணையில் விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் படுவேகத்தில் நடைபெறுமாம். முப்பெரும் விழாவில் கனி மொழி பங்கேற்பதை திமுக தலைவர் கருணாநிதி மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக சென்னைத் தகவல்கள் தெரிவிக் கின்றன. முப்பெரும் விழாவின் நட்சத் திர பங்கேற்பாளராக கனிமொழி வலம் வருவதற்கான ஏற்பாடு களைச் செய்வதே திமுகவின் இப்போதைய முக்கியப் பணியாக உள்ளதாம். அடுத்த மாதம் நடக்க விருக்கும் உள்ளாட்சித் தேர்தலை திமுக சந்திக்கும் விதம், அதன் கூட்டணி உத்தி ஆகியன கனிமொழி முன்னிலையில் முப்பெரும் விழாவில் அறிவிக்கப் பட உள்ளதாக திமுக வட்டாரங் களில் செய்தி கசிந்துள்ளது. இந்நிலையில் நேற்று திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு வந்த மு.க. அழகிரி, திருச்சி இடைத் தேர்தலில் திமுகவின் நிலை குறித்து சூசகமான பதிலைத் தந்தார். இத்தேர்தலை திமுக புறக் கணிக்குமா என்று ஒரு நிருபர் கேட்டதும் சினமடைந்த அவர், “யார் சொன்னது அப்படி? சொன்னவரை அழைத்து வாருங்கள்” என்று கடுமையாகச் சொன்னாராம். இடைத் தேர்தலை திமுக புறக்கணிக்காது என்பது அழகிரி யின் பதிலிலிருந்து தெரிய வரு கிறது. நில அபகரிப்பு வழக்கில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன் னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், அனிதா ராதாகிருஷ் ணன் ஆகியோரையும், இதர திமுக பிரமுகர்களையும் மு.க. அழகிரி சந்தித்துப் பேசினார்

0 comments: