Thursday 29 September 2011

பசுக்களை கொன்றால் 7 வருடம் சிறைத்தண்டனை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நாடு முழுவதும் பசுவதை தடை சட்டம் அமலில் இருந்தாலும் அந்த சட்டம் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை என்பதால்
குஜராத் மாநிலத்தில் நரேந்திரமோடி அரசு இந்த சட்டத்தில் புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.
இதில் விதிகள் கடுமையாக்கப்பட்டு தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய சட்ட திருத்தத்தின்படி பசுவை கொன்றால் 7 வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
பசுக்கள், காளைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் எடுத்துச் செல்ல முடியாது. இதற்கு அனுமதி வழங்க தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்.
விவசாய பயன்பாட்டுக்கு தவிர மற்ற காரணங்களுக்கு கொண்டு செல்ல முறையான ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதை மீறி யாராவது பசுக்களையோ, காளைகளையோ கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
இந்த சட்ட திருத்தம் குஜராத் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

0 comments: