Sunday 18 September 2011

சகல வசதிகளுடன் கொழும்பில் 1000 வீடுகள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கொழும்பில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மின்சாரம், குடிநீர் விநியோகம் உட்பட சகல வசதிகளையும் கொண்ட
1000 வீடுகள் அமைக்கும் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய தெமட்டகொடையில் முதற்கட்டமாக 320 வீடுகள் கட்டப்பட் டுள்ளதுடன், அவை கொம்பனித்தெருவிலி ருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு கையளிக்கப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
மேலும் கொழும்பில் குறைந்த வசதிகளைக் கொண்ட வீடுகளுக்கு புதிதாக சகல வசதிகளையும் கொண்ட வீடுகளை கையளிக்கும் திட்டத்தின் கீழ் 500 வீடுகள் கட்டப்படவுள்ளன. இவ்வீடமைப்பு கட்டுமானப் பணிகளை தனியார் கம்பனியினரிடம் கையளிக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அமைச்சரவையின் டெண்டர் குழுவின் சிபாரிசுக்கமைய 952 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது என்றார். குடிநீர், மின்சாரம், மலசலகூட வசதி உள்ளிட்ட சகல வசதிகளுடனான வீடுகள் கட்டி முடிக்கப்படும் என கொழும்பு நகரிலிருந்து எவரும் அப்புறப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் 15 ஆயிரத்து 407 குடும்பங்களுக்கு அவர்களது வீடுகளுக்கான மலசல வடிகாலமைப்புக்களை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய கொழும்பு பெரும்பாகத்தில் மலசல மற்றும் கழிவுநீர் வடிகாலமைப்புக்கென 1096 மில்லியன் ரூபாவை அரசு செலவிட்டுள்ளது.
தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவ, கொலன்னாவ, ஜாஎல மற்றும் ஏக்கல பிரதேசங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக உலக வங்கி 584 மில் லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ளது என்றும் பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா

0 comments: