Friday 5 August 2011

எதிர்பார்த்தது போல பட்ஜெட் இருக்கிறது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை: ‘‘தேமுதிக எதிர்பார்த்தது போல பட்ஜெட் உள்ளது’’ என்று விஜயகாந்த் வரவேற்றுள்ளார்.
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் 2011-2012ம் ஆண்டு நிதி நிலை அறிக்கை நாங்கள் எதிர்பார்த்தது போலவே அமைந்துள்ளது. வறுமை ஒழிப்புக்கு பல திட்டங்கள் உள்ளன. குறிப்பாக ஒவ்வொரு குடும்பத்தையும் மையமாக வைத்து வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பமும் நேரடியாக பயன்பெறும் வகையில் வறுமை ஒழிப்புத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு பெருக பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வேண்டும். இந்த நிதி நிலை அறிக்கையில் 10 சதவிகிதத்திற்கு மேலாக பொருளாதார வளர்ச்சி காணப்படும் என்றும், அதற்கென விவசாயத் துறையிலும், தொழில் துறையிலும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி அதிகரிக்குமானால் வேலை வாய்ப்பு பெருகும் என்பதால் தேமுதிக இதை வரவேற்கிறது.

வரிகளே போடக்கூடாது என்பதல்ல. வசதியுள்ளவர்களுக்கு வரியைப் போட்டு, வறியவர்களுக்கு வசதி செய்வதுதான் ஒரு முற்போக்கான அரசின் கடமை என்று அண்ணா கூறினார். அந்த வகையில் இன்றைய தமிழக அரசின் வரி விதிப்பு கொள்கை அமைந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments: