Monday 15 August 2011

கால்ஷீட் தர மறுத்த விமல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழ்சினிமாவில் சமூக அக்கறையோடு படம் எடுக்க வருகிறவர்களின் எண்ணிக்கை குறைவு. சேரன் போல
ஒன்றிரண்டு பேர் இருந்தார்கள். இப்போது அந்த இடமும் வெற்றிடம் ஆகிவிட்டது. ஆனால் குழந்தை தொழிலாளர்கள் பிரச்சினையை மையமாக வைத்துதான் ‘வாகை சூடவா’ படத்தை இயக்கி வருகிறாராம் ‘களவாணி’ சற்குணம்.


1966ல் தங்கப் பத்திர திட்டம் என்றொரு திட்டம் இருந்ததாம். (நமக்கெங்கே தெரிகிறது, எல்லாம் சற்குணமே சொன்ன தகவல்). 100 பவுன் கொடுக்கிற படித்த இளைர்களுக்கு அரசாங்க வேலை தருவார்களாம். அப்படி தர முடியாத படித்த இளைர்கள் இலவசமாக கிராம சேவை செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலம் இந்த சேவையைச் செய்தால் அவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். இந்தப் பிரிவின் கீழ் சிக்கிக் கொள்ளும் படித்தவரான விமல், ஒரு கிராமத்திற்கு இலவசமாக வேலை பார்க்கும் வாத்தியாராக வந்து சேர்கிறார். அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

கிட்டதட்ட எட்டு கோடிக்கு மேல் செலவு செய்திருக்கிறார்களாம் இப்படத்திற்கு. படப்பிடிப்பு முழுவதும் முடிந்து ‘போஸ்ட் புரொடக்ன்’ பணிகள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட்டில் ‘வாகை சூடவா’ வந்தால் என்ன செய்வது என்று சில முன்னணி பட இயக்குனர்களே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.

ஆனால், இன்னும் வியாபார பேச்சு வார்த்தையை கூட துவங்கவில்லை தயாரிப்பு தரப்பிலிருந்து. அப்படியிருக்க ஆகஸ்ட்டில் படம் வெளிவர வாய்ப்பே இல்லை என்கிறார்கள். அதற்குள் தங்கள் படத்தை வெளியிட்டுவிட்டால் தேவலாம் என்று நினைக்கும் சில நிறுவனங்கள் அவசர அவசரமாக திரையரங்குகளைப் பதிவு செய்து வருகின்றனவாம்.

இதற்கிடையில் இப்படத்தின் மீதுள்ள அபார நம்பிக்கையின் காரணமாக தன்னி டம் முன்பே கதை சொல்லி ஒப்பந்தம் பேசி வைத்திருந்த ‘தெனாவட்டு’ கதிர், ரவிமரியா போன்ற இயக்குனர்களிடம் “இப்போது கால் ஷீட் இல்லை” என்று கூறிவிட்டாராம் விமல்.

ஒருவேளை கவுதம் மேனனும், மணிரத் னமும் வாசலில் காத்துக் கிடப்பார்கள் என்று நம்புகிறாரோ என்னவோ?

0 comments: