Monday 15 August 2011

உலக போலிஸ் வலையில் இந்திய சிலைத் திருடன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்தியாவில் இருந்து சிலைகளைத் திருடி, அமெரிக்காவில் அருங்காட்சியம் அமைத்து கலைப் பொருட்களை
விற்பதாகக் கூறப்படும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரைப் பிடிக்க அனைத்துலகப் போலிஸ் அமைப்பான ‘இன்டர்போல்’ முயன்று வருகிறது.


தலைமறைவாக இருக்கும் அந்த நபர், தமிழ் நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் 12 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் என தமிழக பொருளியல் குற்றப் பிரிவின் இணை ஆணையரான ராஜா தெரிவித்தார்.

சஞ்சீவி அசோகன் என்பவர் தலைமையில் இயங்கிய அந்தக் குமபல், 2008ம் ஆண்டில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து 26 சிலைகளைத் திருடியுள்ளது. அவற்றில் 18 சிலைகள் உடையார் பாளையத்தில் இருக்கும் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்தும், மீதமுள்ள சிலைகள் விக்கிரமங்கலத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இருந்தும் களவாடப்பட்டதாக ராஜா கூறினார்.

11 பேர் கைது செய்யப்பட்டுவிட்டாலும், ஒருவர் மட்டும் சிலைகளுடன் தப்பிச் சென்றுள்ளார். விசாரணையில், அந்த நபர் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது. மேலும், நியூயார்க் நகரில் ஓர் அருங்காட்சியகத்தை அமைத்து அந்த சிலைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பளபள தாட்களுடன் வெளியாகும் ஒரு பத்திரிகையில், பின்புலத்தில் திருடப்பட்ட நடராஜர் மற்றும் சிவகாமி சிலைகள் இருக்க, அவருடைய படம் வெளியாகியுள்ளது.

அந்த நபரைப் பிடிக்க தமிழக பொருளியல் குற்றப் பிரிவு தற்போது இன்டர்போல் உதவியை நாடியுள்ளது.

இதனிடையே, ரூ. 10 லட்சம் மதிப்புள்ள சுப்பிரமணியர் மற்றும் பழனி ஆண்டவரின் பஞ்சலோக சிலைகளை வைத்திருந்த இருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் இந்த சிலை திருடும் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

0 comments: