Sunday 28 August 2011

அண்ணா அறிவாலய நிலத்தை அரசு மீட்கும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலய வளாகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலம்
சட்டப்படி மீட்கப்படும் என்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்..

சட்டசபையில் வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கை மீது பேசிய அதிமுக உறுப்பினர் சீனிவாசன், பல்வேறு பகுதிகளில் திமுகவினர் அரசு நிலங்களை ஆக்கிரமித்திருப்ப தாக தெரிவித்தார்.அப்போது ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பிப்பேசிய அதிமுக உறுப்பினர் வெற்றிவேல், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் முன்பாக உள்ள சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 10 கிரவுண்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்ப தாகவும், அதன் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்து பேசியய தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி அறிவாலயத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக சென்னை மாநகராட்சி தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் 2 மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சென்னை மாநகராட்சியிலும் அதிமுக வெற்றி பெறும்.முதல்வர் அறிவிப்பவர் தான் மேயராக வெற்றிபெற்று வருவார். அப்போது அறிவாலய வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்பு நிலத்தின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து அந்த நிலம் மீட்கப்படும் என்றார் அமைச்சர் கே.பி.முனுசாமி.
தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் அந்த நிலம் அரசுக்கு சொந்தமான நிலம் தான். அது பராமரிப்புக்காகத்தான் மாநக ராட்சியிடம் தரப்பட்டுள்ளது. எனவே அரசாங்கமே அந்த நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.பி.முனுசாமி நிச்சயமாக அந்த நிலத்தை மீட்க அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.


முன்னாள் அமைச்சர் பொன்முடி கூட அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனது மாமியார் பெயரில் பட்டா போட்டுக் கொண்டிருந்தார்.

இது தொடர்பான வழக்கு உள்ளது. அந்த வழக்கு முடிந்து தீர்ப்பு வந்ததும் அந்த இடமும் மீட்கப்படும் என்று கூறினார். அப்போது மார்க்சிஸ்ட் உறுப்பினர் சவுந்தர்ராஜன் குறுக்கிட்டு, மாமியார் பெயரில் அரசு நிலத்தை பட்டா போட்டுக்கொண்டவர்களை மாமியார் வீட்டுக்கு எப்போது அனுப்பப் போகிறீர்கள் என்று கூறினார்.

உடனே அமைச்சர் கே.பி.முனுசாமி தவறு செய்தவர்கள் மீது அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று பதிலளித்தார்.

0 comments: