Thursday 18 August 2011

இன்று நள்ளிரவில் லாரி ஸ்டிரைக் தொடக்கம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இன்று நள்ளிரவு முதல் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் லாரி ஸ்டிரைக் தொடங்குகிறது. இதனால், பெட்ரோல், கேஸ் தட்டுப்பாடு
ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்


அபாயமும் ஏற்பட்டுள்ளது.

டீசல் விலையை குறைக்க வேண்டும். சுங்கச்சாவடிகளில் சீரான கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று நள்ளிரவு முதல் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களில் லாரி ஸ்டிரைக் தொடங்குகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு

பகுதிகளில் இருந்து கடந்த 4

நாட்களுக்கு முன்பிருந்தே வெளிமாநிலங்களுக்கு லாரிகள் செல்லவில்லை. லாரி புக்கிக் அலுவலகங்களும் 4 நாட்களாக செயல் படவில்லை. வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, திருச்சியில் தேங்காய், திருப்பூர், ஈரோட்டில் ஜவுளி, தூத்துக்குடியில் கருவாடு உள்பட மாநிலத்தில் இருந்து செல்லும் பல்வேறு பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. நாமக்கல் பகுதியில் உள்ள பண்ணைகளில் 3 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பொருட்களை ஏற்றி வரும் லாரிகளும் கடந்த 4 நாட்களாக வரவில்லை. சரக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதால் பருப்பு, இரும்பு கம்பிகள், கோழி தீவன மூலப்பொருட்களான மக்காசோளம், புண்ணாக்கு

உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தமிழகத்துக்கு வரவில்லை.

லாரி ஸ்டிரைக் காரணமாக

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. பதுக்கல்காரர்கள் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்க தொடங்கியுள்ளனர். மார்க்கெட்களுக்கு காய்கறி வரத்தும் குறைந்து வருகிறது. இதனால் விலையும் உயர்கிறது.

டீசல், பெட்ரோல் டேங்கர் லாரி உரிமையாளர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளனர். இதனால் டீசல், பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்படும். முன்னெச்சரிக்கையாக நேற்று மாலை முதல் டூ வீலர் மற்றும் கார் வைத்திருப்பவர்கள் பெட்ரோல் பங்க்குக்கு சென்று டேங்குகளை நிரப்பி வருகின்றனர். இதனால் அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் கிரானைட் கற்கள், மாங்கூழ், காய்கறிகள், தேங்காய், பருத்தி நூல், திருப்பூரில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்ப வேண்டிய பின்னலாடைகள், பல்லடம் பகுதியில் கறிக்கோழிகள், காங்கயத்தில் கொப்பறை தேங்காய்கள், சோமனூர் பகுதியில் விசைத்தறி துணிகள், உடுமலையில் பஞ்சு மற்றும் நூல் என பல நூறு கோடி மதிப்பிலான பொருட்கள் தேங்கியுள்ளன.

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறுகையில், ‘‘இன்று நள்ளிரவு முதல் லாரி ஸ்டிரைக் தொடங்கும் என அறிவித்திருந்தாலும் நேற்று நள்ளிரவு முதலே லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுவிட்டன. கோரிக்கைகள் நிறைவேறும் வரை லாரி ஓடாது. ஸ்டிரைக்கால் தமிழகத்தில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள், கிளீனர்கள் வேலை இழந்துள்ளனர். லாரி உரிமையாளர்களுக்கு தினமும் ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். மத்திய, மாநில அரசுகளுக்கு தினமும் ரூ.2500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கம், எல்பிஜி கேஸ் டாங்கர் உரிமையாளர்கள் சங்கமும் ஸ்டிரைக்கில் கலந்து கொள்கின்றன’’ என்றார்.

0 comments: