Thursday 25 August 2011

'கடாபியைக் காட்டிக் கொடுப்பவருக்கு பொதுமன்னிப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
லிபியாவின் தலைநகர் திரிபோலியில், கேணல் கடாபியின் தலைமையகத்துக்குள் கிளர்ச்சிப் படையினர்
 நுழைந்துவிட்ட பின்னரும், அவருக்கு ஆதரவான படையினர் இன்னமும் எதிர்த்தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

அந்தப் பகுதியில் உள்ள கடாபி ஆதரவாளர்களை முற்றாக அழித்து விடுவதற்கு கிளர்ச்சிப் படைகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்ற நிலையில் அங்கு பலத்த மோதல்கள் நடப்பதாக பிபிசியின் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய விடயங்கள்தாக்குதல், உலகம், போர் அருகே வெளளிநாட்டுச் செய்தியாளர்கள் தங்கியுள்ள ஹொட்டல் ஒன்றைச் சுற்றியும் கடுமையான சண்டைகள் நடக்கின்றன. பல வெளிநாட்டுச் செய்தியாளர்கள் அங்கு அகப்பட்டிருக்கிறார்கள்.
அங்கு பல தினங்களாக அகப்பட்டிருந்த பிபிசி குழுவினர் அங்கிருந்து தற்போது வெளியேறியுள்ளனர்.

தெற்கு மற்றும் மத்திய அயல் பகுதிகளிலும் மோதல்கள் நடப்பதுடன், அங்கு சட்டம் ஒழுங்கு முற்றாகப் பாதிக்கப்பட்டு விட்டதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

மாவீரர் சதுக்கத்தில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.


கடாபியை பிடித்துத் தருபவருக்கு பொதுமன்னிப்பு

இதற்கிடையே, கேணல் கடாபியை யாராவது பிடித்துத் தந்தாலோ அல்லது கொன்றாலோ அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று கிளர்ச்சிக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

அவரைப் பிடித்துக்கொடுப்பவருக்கு பத்து லட்சம் டாலருக்கும் அதிகமான சன்மானத்தை வழங்க ஒரு லிபிய வணிகர் தயாராக இருப்பதாகவும் கிளர்ச்சிப்படையின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கேணல் கடாபி மீண்டும் தாக்குவதை தவிர்ப்பதற்கு, அவரை பிடிப்பது மிகவும் அவசியமானதாகும் என்று முன்னதாக கிளர்ச்சிப்படையினர் கூறியிருந்தனர்.

ஆனால், அவரோ அல்லது அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களோ எங்கு தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்ற சமிக்ஞை எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

லிபியாவின் எதிர்காலம் குறித்த மாநாடு

அதேவேளை லிபியாவின் எதிர்காலம் குறித்து ஆராய்வதற்காக கிளர்ச்சிக்குழுவின் தேசிய இடைக்கால கவுன்ஸிலின் பிரதிநிதிகள், மேற்கத்தைய மற்றும் அரபு நாடுகளின் பிரதிநிதிகளுடன் கட்டாரில் மாநாடு ஒன்றை நடத்துகிறார்கள்.
தமக்கு உடனடி உதவியாக இரண்டரை பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்று இடைக்கால கவுன்ஸிலும் மூத்த தலைவரான மஃமுட் ஜிப்ரில் கேட்டிருக்கிறார்.

விரைவில் பிரான்ஸ் செல்லவிருக்கும் அவர், உலகெங்கும் முடக்கப்பட்டுள்ள லிபியாவின் 30 பில்லியன் டாலர்களை மீட்டுத் தருமாறு கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

0 comments: