Tuesday 16 August 2011

இந்திய தேசியக் கொடியை முதலில் ஏற்றியவர் யார்?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
1947ம் ஆண்டில் இந்தியா பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இந்திய தேசியக் கொடியை ஏற்றி இந்தியாவை
ஒரு சுதந்திர நாடாக பிரகடனம் செய்ய வேண்டிய நிகழ்வு இடம்பெறவிருந்தது.

அப்போது ஸ்ரீ ஜவகர்லால் நேரு உட்பட காங்கிரஸ் தலைவர்கள் மகாத்மா காந்திஜீயிடம் நீங்கள் தான் தேசியக் கொடியை முதல் தடவையாக ஏற்றி வைத்து இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என்பதை உலக நாடுகளுக்கு பிரகடனம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
அதற்கு காந்தி ஜீ அவர்கள் அதற்கு நான் பொருத்தமானவர் அல்ல. நான் ஒருவரின் பெயரை சொல்கிறேன் என்று தெரிவித்து மெளன் பெட்டன் பிரபுவே அதற்கு பொருத்தமானவர் என்று கூறிய போது அனைவரும் அதிர்ச்சியில் வாயடைத்து போய்விட்டனர்.

அதனைப் பார்த்து காந்திஜி அவர்கள் சிரித்த முகத்துடன் இந்தியாவை ஆக்கிரமித்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வைஸ்ரோய் பதவியை இறுதியில் வகித்தவர் மெளன் பெட்டன் பிரபு. அவர் தான் பிரிட்டிஷ் தேசிய கொடியை இறக்கிவிட்டு இந்திய தேசிய கொடியை ஏற்ற வேண்டுமென்று கூறினார்.

அப்போதும் விடயம் புரியாது காந்தியை உற்று நோக்கிக் கொண்டிருந்த காங்கிரஸ் தலைவர்களை பார்த்து காந்தி ஜி, இந்த மனிதர் தமது நாட்டு தேசியக் கொடியை இறக்கும் போது நிச்சயம் மனவேதனை அடைவார்.



அவரே இந்தியாவின் கொடியை ஏற்றும் போது ஒரு நல்ல செயலை செய்து முடித்தேன் என்று அவர் மகிழ்ச்சி அடைவார். அவருக்கு நாம் அந்த சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டுமென்று சொன்னார்.

இந்த சம்பவத்தில் இருந்து காந்தி ஜியின் நற்பண்பை இந்திய காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமன்றி முழு உலகமே தெரிந்துக் கொண்டது

2 comments:

said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது

Hot tamil movies

said...

மிக்க நன்றி