Sunday 14 August 2011

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்கள் தெரிவு ஆரம்பம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
23 உள்ளூராட்சி சபைகளுக்கு ஐ. ம. சு. மு. சார்பாக போட்டியிடும்
வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐ. ம. சு. மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.




ஐ. ம. சு. மு. வேட்பாளர் பட்டியல் இறுதி வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் திங்கட்கிழமை முதல் மகாவலி நிலையத் தில் நடைபெறும். சு. க. சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விண்ணப்ப ப்படிவங்கள் கடந்த 10 ஆம் திகதி வரை விநியோகிக்கப்பட்டது.



இதேவேளை ஐ. ம. சு. முவில் உள்ள கூட்டுக் கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை ஐ. ம. சு. மு. செயலாளருக்கு கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ. ம. சு. மு. சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் வேட்பு மனுக்களில் கையெழுத்திட உள்ளதா கவும் அவர் குறிப்பிட்டார். 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் 18 முதல் 25 ஆம் திகதி வரை ஏற்கப்பட உள்ளன.



இதேவேளை, ஐ. தே. க., ஜே. வி. பி. என்பனவும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

0 comments: