Tuesday 16 August 2011

லண்டன் சென்ற இலங்கை 80 மாணவ, மாணவியர் நடுத்தெருவில்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பிரிட்டனிலுள்ள உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி வாய்ப்பு பெற்றுத் தருவதாக உறுதியளித்து லண்டனுக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ள மாணவ மாணவியர் 80 பேர் அங்கு கைவிடப்பட்டு நடுத்தெருவில் நிற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


இவர்களை பிரிட்டனுக்கு அழைத்துச்சென்ற இரு நிறுவனங்களும் மாணவர் ஒருவரிடம் இருந்து சுமார் 15 லட்சம் ரூபா என்ற ரீதியில் 12 கோடி ரூபா வரையிலான தொகையொன்றை மோசடி செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கொழும்பு, கொள்ளுப்பிட்டி மற்றும் நீர்கொழும்பிலுள்ள இரு வர்த்தக நிறுவனங்கள் மூலமாகவே இவர்கள் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்களின் பிரதிநிதிகள் சிலர் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளதாகத் தூதரக அமைச்சு ஆலோசகரான சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாட்டை அடுத்து அது பற்றிய விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கும் சமிந்த குலரத்ன, பிரிட்டிஷ் அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சுக்கும் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பணம் செலுத்திப் பிரவேசித்த அந்த உயர் கல்வி நிறுவனம் காரணங்கள் எதனையும் தெரிவிக்காது திடீரென மூடப்பட்டதால் நாங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மாணவர் பிரதிநிதி ஒருவர் தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

மேற்படி இரு நிறுவனங்களும் தற்போதும் பிரிட்டன் கல்வி வாய்ப்புகள் தொடர்பாக மாணவர்களை அனுப்பி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comments:

said...

பெரும் மோசடி...நல்ல வேளை உயிரையும் சேர்த்துப் பறிக்காமல் விட்டுவிட்டார்கள்!!!...அருமையான விழிப்புணர்வுப் பதிவு.மிக்க நன்றி பகிர்வுக்கு..........