Monday 25 July 2011

தமிழ் கூட்டமைப்பு அமோக வெற்றி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வடக்கில் உள்ள 20 சபைகளில் 3 நகரசபைகள் உட்பட 17 சபைகளைக் கைப்பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக
வெற்றியீட்டியுள்ளது.
இவற்றில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கமாக இணைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி கிளிநொச்சி மாவட்டத்தில் வெற்றிபெற்றுள்ள இரண்டு சபைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் தமிழ் மக்களின் உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாததன் காரணமாகவே அரசாங்கக் கட்சிக்கு தாங்கள் வாக்களிக்கவில்லை என குறிப்பிட்ட யாழ் மாவட்டத்து வாக்காளர்களில் சிலர், இதற்காக அரசு தமிழ் மக்களைப் புறந்தள்ளக்கூடாது என்றும் தமிழோசையிடம் கருத்து சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கிடையே, அரசு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ள போதிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தவறான வழிகாட்டலில் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளதாகக் கூறிய அமைச்சரும் ஈபிடிபி கட்சியின் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா, மக்கள் அடுத்த தேர்தலிலாவது விழிப்படைவார்கள் என நம்புவதாகத் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமது திடசங்கற்பத்தை வெளியிடும் வகையிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பை அமோகமாக வெற்றிபெறச் செய்துள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
கிழக்கிலும் தமிழ் கூட்டமைப்பு வெற்றி
இதேவேளை, கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தில் இரு சபைகளையும் இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.
காரைதீவு மற்றும் திருக்கோவில் பிரதேச சபைகளுக்கு 14 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற இத் தேர்தலில் 5 அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயேட்சைக் குழுக்கள் சார்பாக 107 பேர் போட்டியிட்டனர்.
காரைதீவு பிரதேச சபையைப் பொறுத்த வரை 2006 ம் ஆண்டு உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலைப் போன்றே இம்முறையும் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் 4 பேரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரும் தெரிவாகியுள்ளனர்.

மாவை சேனாதிராஜா- த.கூட்டமைப்பு எம்.பி.
திருக்கோவில் பிரதேச சபையைப் பொறுத்த வரை 2006 ம் ஆண்டு தேர்தலில் 9 ஆசனங்களiயும் இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக கைப்பபற்றியிருந்தது. ஆனால் இத் தேர்தலில் அக்கட்சி சார்பில் 7 பேர் மட்டுமே இம் முறை தெரிவாகியுள்ளனர்
ஏனைய இருவரில் ஒருவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பிலும் அடுத்தவர் ஐக்கிய தேசிய கட்சி சார்பிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இரு சபைகளிலும் 1000 ற்கும் குறைவான வாக்குகளையே பெற்று

படுதோல்வி கண்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் பட்டினமும் சூழலும் பிரதேச சபையை இலங்கை தமிழரசு கட்சியும் சேருவில், கந்தளாய் மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேச சபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுந்திர முனனனியும் கைப்பற்றியுள்ளன.


0 comments: