Sunday 24 July 2011

உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர்கள் அதிக இடத்தை பிடிக்கும் பேட்டி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
விஜய் இரசிகர்கள் இனி நமக்காக உழைத்து உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற
வேண்டும் என்றார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.


விஜய் மக்கள் இயக்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருபாட்சிபுரத்தில் வியாழக்கிமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலப் பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ.புஸ்ஸி ஆனந்து முன்னிலை வகித்தார்.இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது;

ஜெயலலிதா ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமையவேண்டும், தவறு செய்தவர்கள் ஓய்வெடுக்கவேண்டும் என்று விஜய் விரும்பினார். அவரது ஆசை இரசிகர்களாகிய உங்கள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பேரவைத் தேர்தலில் 80 இலட்சம் இளைஞர்கள் புதிதாக ஓட்டுப்போட்டுள்ளதாக புள்ளவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 50 சதவீதம் பேர் விஜய் இரசிகர்கள். இதுவரை அடுத்தவர்களுக்காக உழைத்து தேய்ந்து போன நாம் இனி நமக்காக உழைத்து முன்னுக்கு வர÷ண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு நகரத்துக்கு ஒரு உறுப்பினர் வெற்றிபெற்றால் கூட தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 1000 பேர் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கும். உங்கள் ஆதரவு மூலம் விஜய் இளைய தளபதியாக வளர்ந்துள்ளார். தற்போது அவர் பெயரை வைத்து நீங்கள் முன்னுக்கு வரவேண்டும்.செயலில் கில்லி மாதிரி இருக்க வேண்டும்.மக்கள் விழிப்புடன் உள்ளனர். எனவே கொள்ளையடிக்கும் எண்ணத்தில் யாரும் அரசியலுக்கு வரவேண்டாம். விஜய் முழுநேர நடிகர் தான்.நேரடியாக அவர் அரசியலுக்கு வரமாட்டார். நான் தான் உங்களுக்கு பாலமாக இருப்பேன்.

எஸ்.ஏ.சந்திரசேகரன் காரை முற்றுகையிட்ட இரசிகர்கள்: 750 க்கும் மேற்பட்ட இரசிகர்கள் கூடியிருந்த மண்டபத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் வேலூர் மாவட்டத் தலைவர் நந்தகுமார், மாவட்ட இளைஞரணித் தலைவர் வேல் முருகன் ஆகிய இருவரையும் எதிரெதிரே நிறுத்தி மன்ற செயல்பாடுகள் குறித்து இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்டறிந்தார். அப்போது நந்தகுமார் சரியாக செயல்படவில்லை என்று கூறி,அவரை மாவட்டத் தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக இளைஞரணித் தலைவர் வேல்முருகன் மாவட்டத் தலைவராக நியமிப்பதாகவும் அறிவித்தார்.

இதனால் அதிருப்தியடைந்த நந்தகுமாரின் ஆதரவாளர் 100க்கும் மேற்பட்டோர் மண்டபத்தைவிட்டு வெளியேறி எஸ்.ஏ.சந்திரசேகர் கார் முன் அமர்ந்து கோஷமிட்டனர்.

இந்நிலையில் மாநிலப் பெறுப்பாளர் புஸ்ஸி ஆனந் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் அவர்களை சமாதானம் செய்து மண்டபத்துக்குள் அழைத்து வந்தனர். 21 மாவட்ட ஊராட்சி வட்டாரங்களில் ஒன்று முதல் 10 வரையுள்ள வார்டுகளுக்கு ஒருவரும் 11 முதல் 21 வரையுள்ள வட்டாரங்களுக்கு மற்றொவரையும் தலைவராக நியமிப்பதாக சந்திரசேகர் உறுதியளித்தார். இதையடுத்து நந்தகுமாரின் ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

0 comments: