இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
கொழும்பு: தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவியும் மகளும் உயிருடன் இருப்பதாக அந்நாட்டு ஆளும் கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தனி நாடு வேண்டும் என்று கோரி விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்றுவித்து போராடி வந்தவர் பிரபாகரன். ஆனால், கருணா, கேபி, இந்தியா உள்ளிட்ட சில வல்லரசுகளின் சதியால் இந்த போராட்டம் தோல்வியில் முடிந்தது.
இலங்கை இராணுவப் படையினரிடம் சிக்கி பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. ஆயினும் இது குறித்து இன்றளவும் சர்ச்சை நிலவி வருகிறது. பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவர் ஈழப்போரை மீண்டும் நடத்துவார் என்று விடுதலைப் புலிகள் தரப்பில் கூறப்பட்டு வந்தாலும், அதற்கான ஆதாரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 3 லட்சம் அப்பாவி தமிழர்களும், போராளிகளும் அழிக்கப்பட்ட தகவல் இப்போது வெளியாகியுள்ளது. போரின் கடைசி நாட்களில் மட்டும் 1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உயிருடன் பிடிப்பட்டவர்களின் நிலை என்ன என்பது இதுவரை தெரியாத நிலையில், பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் கொல்லப்பட்டார்.
இதனிடையே அவரது மனைவியும், குழந்தைகள் பாலச்சந்திரன், மற்றும் துவாரகா ஆகியோர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது அம்மூவரும் பத்திரமாக இலங்கையிலிருந்து வெளியேறிவிட்டதாகவும், வெளிநாட்டில் பத்திரமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதனிடையே பிரபாகரனின் மனைவி, மற்றும் இரு பிள்ளைகளும் உயிருடன் இருப்பதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆளுங்கட்சி உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்கர் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து அவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை வினவினர். அப்போது அவர் பிரபாகரன் மனைவியும் பிள்ளைகளும் உயிருடன் இருப்பது உறுதியாக தெரியும். ஆனால் அவர்கள் எந்த நாட்டில் உள்ளனர் என்பதைக் கூற முடியாது என்று கூரிவிட்டார்.
ஆயினும், மேற்கண்ட தகவல்கள் , உலக நாடுகள் இலங்கைக்குத் தரும் போர்க்குற்ற நெருக்கடியைச் சமாளிப்பதற்காக இலங்கை முயற்சிப்பதாகக் தமிழர் அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.
0 comments:
Post a Comment