Thursday 2 June 2011

கனிமொழிக்கு ஜாமின் வழங்கப்படுமா?-நாளை தீர்ப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராகத் தி.மு.க எம்.பி.கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளார். திஹார் சிறையில் உள்ள கனிமொழி மீண்டும் ஜாமின்  மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே நேற்று முன் தினம் அவரது வழக்கு விசாரணைக்கு வந்து பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா கிடைக்காதா என்று நாளை, ஜூன் 3-ஆம் தேதி நீதிமன்றம் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனிமொழியைத் தவிர்த்து கலைஞர் டிவி-யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி தாக்கல் செய்த ஜாமின் மனுவுக்கும் சேர்த்து நாளைத் தீர்ப்பு வழங்கப்படும்.
 எதிர்வரும் ஜூன் 4-ஆம் தேதி முதல், டெல்லி நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறைத் தொடங்குவதால், ஜூன் 3-ஆம் தேதியே  அவ்விருவர் மீதும் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயினும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், இதுவரை கைது செய்யப்பட்டுள்ள தொலைத்தொடர்பு அதிகாரிகள் அனைவருக்கும் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. தாக்கல் செய்யபட்ட ஜாமின் மனுக்களையும் டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. எனவே கனிமொழிக்கு ஜாமின் கிடைக்குமா என்பது சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது.

0 comments: