Wednesday 11 May 2011

மன்மோகன் சிங்கிடம் ஒபாமா திடீர் ஆலோசனை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று இரவு பிரதமர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசி மூலம் திடீர் ஆலோசனை நடத்தினார். பின்லேடன் மரணம் குறித்து பிரதமரிடம் அவர் ஆலோசித்ததாக தெரிகிறது. பின்லேடனை அமெரிக்கா அதிரடியாக சுட்டு வீழ்த்தியது போல தாவூத் இப்ராகிமையும், மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பிற தீவிரவாத தலைவர்களையும் இந்தியா சுட்டுக் கொல்ல வேண்டும் என்று நாடு முழுவதும் உணர்வலைகள் எழுந்துள்ளன.
ஆனால் நியூயார்க் தாக்குதல் வேறு, மும்பைத் தாக்குதல் வேறு என்று பச்சோந்தித்தனமாக பேசியுள்ளது அமெரிக்கா. அமெரிக்காவைப் போல இந்தியா தாக்குதல் நடத்த முயன்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் ராணுவமும் எச்சரித்துள்ளது. மேலும் காஷ்மீர் எல்லைப் பகுதியில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் ஊடுறுவத் தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்தியாவில் நடந்த, நடந்து வரும் தீவிரவாத தாக்குதல்களை ஆதரித்து அவற்றை செய்யுமாறு உத்தரவிடுவதே பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐ.யும் தான் என்றும் விக்கிலீக்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. இந்தப் பின்னணியில் தான் நேற்று ஒபாமா, மன்மோகன் சிங்கின் தொலைபேசி ஆலோசனை நடந்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தை குறித்த முழுமையான விவரத்தை வெளியுறவு அமைச்சகம் வெளியிடவில்லை. இருப்பினும் தெற்காசிய பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: