Monday 9 May 2011

பிளஸ் டூ தேர்வு முடிவு: ஓசூர் மாணவி முதலிடம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை, மே 9: தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை இயக்குநர் டி. வசுந்தராதேவி திங்கள்கிழமை வெளியிட்டார்.ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.ரேகா ஆயிரத்து 190 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்     பெற்றுள்ளார்.கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவன் வேல்முருகன் ஆயிரத்து 187 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், நெல்லை மாணவி வித்ய சகுந்தலா, பெரியகுளம் மாணவர் ரகுநாதன், நாமக்கல் மாணவி சிந்துகவி, ஓசூர் மாணவி பி.எஸ்.ரேகா ஆகியோர் ஆயிரத்து 186 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.மொத்த மாணவர்களில் 85.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதாக அவர் அறிவித்தார். மாணவர்களில் 82.3 சதவீதம் பேரும், மாணவியரில் 89 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 18 ஆயிரத்து 846.பாடவாரியாக 200க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை:இயற்பியல் - 646, வேதியியல் - 1243, உயிரியல் - 615, கணிதம் - 2720, கம்ப்யூட்டர் சயின்ஸ் - 223, வணிகவியல் - 1167, அக்கவுன்டன்சி - 1320, பிசினஸ் கணிதம் - 358. விலங்கியலில் யாரும் 200 மதிப்பெண் பெறவில்லை

0 comments: