Monday 16 May 2011

33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்; கவர்னர் பர்னாலா பதவிப்பிரமாணம்,

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை: தமிழகத்தின் முதல்வராக அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., 3 வது முறை முதல்வராக இன்று பதவியேற்றார்
. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடந்த விழாவில் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, ஜெயலலிதாவுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். சரியாக பிற்பகல் 12.45 மணிக்கு ‌ஜெயலலிதா பதவியேற்றார். அவரை தொடர்ந்து நிதித்துறை அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம், விவசாயத்துறை அமைச்சராக செங்கோட்டையன், மின்துறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சராக நத்தம் விஸ்வநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக கே.பி.முனுசாமி, தொழில்துறை அமைச்சராக சி.சண்முகவேலு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக ஆர்.வைத்தியலிங்கம், உணவுத்துறை அமைச்சராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக சோ.கருப்பசாமி, உயர்கல்வித்துறை அமைச்சராக பி.பழநியப்பன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக சி.வி.சண்முகம், கூட்டுறவுத் துறை அமைச்சராக செல்லூர் ராஜா, வனத்துறை அமைச்சராக பச்சமால், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறிய துறைமுகங்கள் துறை அமைச்சராக எடப்பாடி கே. பழனிச்சாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக எஸ்.பி.சண்முகநாதன், பொதுப்பணித்துறை அமைச்சாராக கேவி. ராமலிங்கம், சிறப்பு திட்ட அமலாக்க அமைச்சராக வேலு, பிற்படுத்தப்படோர் நலத்துறை அமைச்சராக டி.கே.எம்.சின்னையா, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக ‌எம்.சி.சம்பத், வருவாய்த்துறை அமைச்சராக பி.தங்கமணி, செய்தி மற்றும் விளம்பரத்துறை ஜி.செந்தமிழன், வணிகவரித்துறை அமைச்சராக எஸ்.கோகுல இந்திரா, சமூகநலத்துறை அமைச்சராக செல்வி ராமஜெயம், கைத்துறித்துறை அமைச்சராக பி.வி.ரமணா, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக என்.சுப்ரமணியம், போக்குவரத்து துறை அமைச்சராக வி.செந்தில் பாலாஜி, சுற்றுச்சூழல் துறை அமைச்சராக என்.மரியம் பிச்சை, மீன்வளத்துறை அமைச்சராக கே.ஏ.ஜெயபால், சட்டத்துறை அமைச்சராக இ.சுப்பையா, சுற்றுலாத்துறை அமைச்சராக புத்தி சந்திரன், தொழிலாளர் துறை அமைச்சராக எஸ்.டி.செல்லபாண்டியன், சுகாதாரத்துறை அமைச்சராக வி.எஸ்.விஜய், விளையாட்டுத்துறை அமைச்சராக என்.ஆர்.சிவபதி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னை பல்கலை., நூற்றாண்டு அரங்கில் நடந்த பதவியேற்பு விழாவில் , தே.மு.தி.க., தலைவரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த், குஜராத் முதல்வர் நநேரந்திரமோடி, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு ( தெலுங்குதேசம்) , இடதுசாரி தலைவர்கள் ஏ.பி., பரதன், ராஜா, உள்பட பலர் திரளாக பங்கேற்றனர். தமிழ்த்தாய் வாழ்த்து நாட்டுப்பன்னுடன், 12. 45 க்கு பதவியேற்பு விழா துவங்கியது.
விழாவில் சிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ செயலாளர் தா.பாண்டியன் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி மனித நேய மக்கள் கட்சி, பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி உள்ளிட்ட தமிழக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் , பா.ஜ., மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் சோ, ஐகோர்ட் நீதிபதிகள் , போலீஸ் உயர் அதிகாரிகள், உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.

0 comments: