Wednesday 27 April 2011

மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஊழியர்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அலெக்சாண்டிரா மருத்துவ மனையின் அவசர சிகிச்சை மருத்துவர்களான டாக்டர் அமிலா புண்யதாசா (38), டாக்டர் அந் தோணி சேவியர் ரெக்ஸ்
பிரேம்சந்த் (26) ஆகிய இரு மருத்துவர்களும் விபத்தில் காயம் அடைந்த, அவசர சிகிச்சைக்குத் தவித்த பல நோயாளிகளை கவனித்துள்ளனர்.
ஆனால் ஒன்பது நாட்கள் உணவு, தண்ணீர் இன்றி உயிர் பிழைத்த பங்ளாதேஷ் ஊழியர் டின் இஸ்லாம்(30) கடந்து வந்த சிரமங்களைக் கேட்டு இருவரும்  அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.
“என்னுடைய 15 ஆண்டுகால அனுபவத்தில் மிக மோசமாக உடல் வற்றிய மனிதரின் சம்பவத்தை இப்போதுதான் பார்த்திருக்கிறேன்,” என்று நியூ பேப்பருக்கு அளித்த பேட்டியில் டாக்டர் புண்யதாசா தெரிவித்தார்.
மருத்துவ அதிகாரியான டாக்டர் ரெக்ஸ், “வலுவான மன உறுதி இருந்ததால் அவர் அத்தகைய சம்பத்திலிருந்து தப்பியிருக்கிறார்,” என்று சொன்னார்.
அலெக்சாண்டிரா மருத்துவ மனைக்கு ஊழியர் டின் கொண்டு வரப்பட்டபோது அவர்கள் இருவரும் முதல் சிகிச்சை அளித்தனர். இந்த இரு மருத்துவர் களுடன் மருத்துவக் குழுவினர் ஊழியர் டின்னுக்கு நான்கு நாட்கள் சிகிச்சை அளித்தனர்.
அவசர சிகிச்சைக்கு சக்கர நாற்காலியில் வந்த திரு டின், தோல், நாக்கு வற்றி போய் உடல் மெலிந்து காணப்பட்டார்.
எலும்புடன் ஒட்டிபோன தோலுடன் வற்றிய உடலுக்கு சிகிச்சை அளிப்பதே மருத்துவர் களின் முதல் கடமையாக இருந்தது.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி எதிர் பாராதவிதமாக பயங்கரமான சம்பவத்தில் அவர் சிக்கிக் கொண்டார்.
தென் கிழக்கு பங்ளாதேஷின்  சிட்டகாங் துறைமுகத்தைச் சேர்ந்த டின், தமது நண்பர் அலாமினு டன்(37) கொள்கலனில் மாட்டிக் கொண்டார்.
இரவில் பணி நேரத்தில் சிறிது நேரம் உறங்க முடிவு செய்த அவர்கள் கஞ்சா போதைப் பொருளைப் பயன்படுத்திய பிறகு கொள்கலனுக்குள் தூங்கி விட்டனர். இருவரும் எழுந்து பார்த்ததும் கொள்கலன் பூட்டப் பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இருந்த கொள்கலன் கப்பலில் ஏற்றப்பட்டு சிங்கப்பூருக்கும் வந்து சேர்ந்தது.
உதவிக்கு அவர்கள் விடுத்த அழுகுரல் பயன் அளிக்கவில்லை.
ஒன்பது நாட்களுக்குப் பிறகு மாலை 8.30 மணி அளவில்  கொள்கலனிலிருந்து சத்தம் வரு வதைக் கேட்ட சில ஊழியர்கள் திறந்து பார்க்கையில் டின் நிர் வாணத்துடன் இருந்தார். இறந்து போன அவரது நண்பரின் உடல் அழுகத் தொடங்கியிருந்தது.
சில மணி நேரத்தில் டின் அலெக்சாண்டிரா மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
“சாதாரணமாக ஒருவர் தண்ணீர் இல்லாமல் எட்டு நாட் கள் இருக்க முடியும். அதுவும் சூழ் நிலையைப் பொறுத்தது,” என்றார்  டாக்டர் புண்யதாசா.
அதே சமயத்தில் டின் மிக மோச மான சூழ்நிலையில் இருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
கொள்கலனில் அடைந்து கிடந்த டின் கடும் வெப்பத்திலும் நண்பர் இறந்துவிட்ட மன உளைச்சலிலும் இருந்துள்ளார்.
அவரது நண்பரின் உடல் அழுகிய பிண வாடையும் டின்னை ஓட்டிக்கொண்டது.
“அப்போதுதான் குளித்தார். ஆனால் வாடை போகவில்லை. நான் முகக்கவசம் அணிய வேண்டியிருந்தது,” என்று மற்றொரு மருத்துவரான அனுராதா            நெகி (28) சொன்னார்.
சிகிச்சை முடிந்த பிறகு டின் மற்றவர்கள் உதவியின்றி மருத்துவ மனையிலிருந்து வெளியேறினார்.
பங்ளாதேஷ் தூதரகத்துடன் தொடர்பு கொண்டபோது டின் இன்னமும் சிங்கப்பூரில் இருப் பதாகவும் போலிஸ் விசார ணையில் உதவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Thanks : murasu

0 comments: