Tuesday 12 April 2011

ரூ.11 கோடிக்கு டி-சர்ட்கள் கொள்முதல்: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
திருப்பூரில் உள்ள ஒரே நிறுவனத்தில் இருந்து ரூ.11 கோடி மதிப்புள்ள திமுகவின் சின்னம் வரையப்பட்ட டி-சர்ட்கள் வாங்கப்பட்டது தேர்தல் ஆணையத்தால் கண்டுபிடிக்கப்ப்ட்டது. இது ஆணையத்துக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களைக் கவரும்வண்ணம் டி-சர்ட்கள் வேட்டி துண்டுகள், சேலைகள் ஆகியவற்றை ஆளும் கட்சியினர் பெருமளவில் வழங்கிவருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தங்களுக்கு கவலை அளிப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறினர்.
குறிப்பாக நேற்று வெள்ளிக்கிழமை தேர்தல் செலவுகளை கண்காணிக்கும்
வருமான வரித்துறைப் பிரிவு அதிகாரிகள் இதுகுறித்து உறுதிப் படுத்தியுள்ளனர். இந்தத் தகவல கவலை அளிக்கும் தகவல் என்றும், இதுகுறித்து வருமான வரிப் பிரிவினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வர் என்று வருமான வரிப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேர்தல் நேரத்தில் இவ்வாறு 11 கோடி ரூபாய்க்கு ஒட்டுமொத்தமாக ஒரே நிறுவனத்தில் இருந்து டி-சர்ட்கள் திமுகவினரால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்றும், திமுகவுக்கு இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் என எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

4 comments:

said...

nanthan first

said...

காங்கிரஸ் மற்றும் தி . மு . க. கூட்டணியின் கையால் ஆகாத தனத்தினால் ஈழ மக்கள் பட்ட துன்பத்தை பாருங்கள்
இதை பார்த்து விட்டு ஒட்டு போடுங்கள்

http://thamizhaathamizhaa.weebly.கம

said...

காங்கிரஸ் மற்றும் தி . மு . க. கூட்டணியின் கையால் ஆகாத தனத்தினால் ஈழ மக்கள் பட்ட துன்பத்தை பாருங்கள்
இதை பார்த்து விட்டு ஒட்டு போடுங்கள்

http://thamizhaathamizhaa.weebly.com

Anonymous said...

தி.மு.க தான் அடுத்த ஆட்சி உங்கள் ஒட்டு தி,மு,க விற்க்கே