Monday 21 March 2011

நடிகர் - நடிகைகள் தேர்தல் பிரச்சாரம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நடிகர் வடிவேலு
 23-ந் தேதி தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறேன். அன்றும் மறுநாளும் (24-ந் தேதி) முதல்- அமைச்சர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறேன். பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று பேசுகிறேன். கருணாநிதி 6-வது முறையாக மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார்.
கேள்வி:- விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவீர்களா?
பதில்:- அவர் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பதை முதலில் அறிவிக்கட்டும் அதன் பிறகு எனது முடிவைச் சொல்கிறேன்.
கே:- எத்தனை நாட்கள் பிரசாரம் செய்வீர்கள்?
ப:- அதுபற்றி பிறகு சொல்கிறேன்.
தி.மு.க. அணியில் இடைவேளை விட்டு கிளைமாக்ஸ் போய்க் கொண்டு இருக்கிறது. அவர்கள் அணியில் இன்னும் சூட்டிங்கே துவங்கவில்லை.
இவ்வாறு வடிவேலு கூறினார்.
நடிகை குஷ்பு
அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை தேர்தலில் பேசப் போவதாக சொல்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஊடகங்களில் மட்டும் தான் பூதாகரமாக காட்டப்படுகிறது. இதனால் மக்களுக்கு ஒன்றுமில்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு அதிக பட்ச ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். தற்போது இது சி.பி.ஐ. விசாரணையில் உள்ளது. விசாரணைக்குப்பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்களை நிரபராதிகள் என்று வெளியில் வருவார்கள். இந்த விவகாரத்தை வைத்துக் கொண்டு 5 ஆண்டு கால மக்கள் நல தி.மு.க. ஆட்சியை எதிர்க்கட்சிக்காரர்களால் விமர்சிக்கவே முடியாது.

மக்கள் நல பணி செய்ததாக பெருமையுடன் சொல்லிக்கொள்ள எதிர் அணியிடம் எதுவுமே இல்லை. அதனால் தான் ஸ்பெக்ட்ரம், ஸ்பெக்ட்ரம் என்கிறார்கள்.   தேர்தல் பிரசாரத்தின் போது தனிப்பட்ட முறையில் யாரையும் நான் தாக்கி பேசப்போவதில்லை. விஜயகாந்த்தையோ, கார்த்திக்கையோ, அல்லது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து நிச்சயம் நான் பேசமாட்டேன்.

கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. செய்துள்ள மக்கள் நலப்பணிகளும், தற்போதைய தேர்தல் அறிக்கையும் நிச்சயம் தி.மு.கழக ஆட்சி மீண்டும் தமிழ்நாட்டில் மலர செய்யும். என்னுடைய பிரசாரமும் தி.மு.க.வின் மக்கள் நல சேவைகளையும், சாதனைகளையும் முன் நிறுத்தியே இருக்கும்.   தலைவர் கலைஞர் மீதும், அவர் குடும்பத்தினர் மீதும் விஜயகாந்த் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுகிறார். பழி வாங்கும் விதமாக அவர் நடந்து கொள்கிறார். ஆரோக்கியமான அரசியலுக்கு இது உகந்தது அல்ல. தமிழ்திரை உலகம் அ.தி.மு.க. பக்கம் சாய்ந்து விட்டது போன்ற மாயை ஏற்படுத்துகிறார்கள்.

நான் கூட ஜெயா தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறேன். பிறகு கலைஞர் டி.வி.க்கு சென்றேன். இதையடுத்து தி.மு.க.வின் கொள்கைகள் பிடித்திருந்ததால் அந்த கட்சியில் சேர்ந்தேன். எனவே கோலிவுட் அ.தி.மு.க. பக்கம் சாய்ந்து விட்டதாக சொல்ல முடியாது. நடிகர் விஜய் அ.தி. மு.க.வுக்கு பிரசாரம் செய்வேன் என்று இதுவரை சொல்லவில்லையே? எனவே நடிகர்-நடிகைகள் ஒரு பக்கமாக சாய்ந்து விட்டார்கள் என்று சொல்ல இயலாது. இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.
நடிகர் செந்தில்
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளேன். நடிகர் கார்த்திக் கட்சியினர் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்வேன். கலைஞர் வீட்டு வசதித்திட்டமும் ஒரு மோசடித்திட்டமாகும். அரசு கொடுக்கும் ரூ. 75,000ல் வீடு கட்டவே முடியாது.
இதனால் கட்டுமானப்பொருட்களின் விலை பல மடங்கு ஏறி விட்டது. விலைவாசி உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. தென் மாவட்டங்களில் யாருடைய பலம் இருந்தாலும் அதையும் தாண்டி அ.தி.மு.க. கூட்டணி அதிகளவில் வெற்றி பெறும்.
அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தன்னோடு நடிகர்கள் ராதாரவி, ஆனந்தராஜ், குண்டு கல்யாணம், சரவணன், சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: