Sunday, 6 March 2011

மும்பை தீ விபத்தில் வீட்டை இழந்தார் "ஸ்லம்டாக் மில்லியனர்" சிறுமி ரூபினா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மும்பை பாந்த்ராவில் இன்று நிகழ்ந்த தீ விபத்தில், ஆஸ்கர் விருது பெற்ற "ஸ்லம்டாக் மில்லியனர்" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற ரூபினா அலி என்ற சிறுமியின் வீடு சேதமடைந்தது. மும்பை புறநகரான பாந்த்ராவின் கிழக்குப் பகுதியில், ரயில்வே தண்டவாளத்தையொட்டி குடிசைகள் நிறைந்த பகுதி உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இங்கு ஏற்பட்ட தீ விபத்தில் ரூபினா அலியின் வீடு உள்பட சுமார் 2000 குடிசைகள் எரிந்து சாம்பலானது. இதில் "ஸ்லம்டாக் மில்லியனர்" படத்தில் நடித்ததற்காக ரூபினா பெற்ற திரைப்பட விருதுகளும் தீயில் கருகிவிட்டதாம். இந்த தீ விபத்தில் காயமடைந்த 21 பேர், அருகில் உள்ள மருத்துவமனையி்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 comments: