Wednesday 30 March 2011

இந்தியா - பாகிஸ்தான் போட்டி: கள்ள நுழைவுச் சீட்டு ரூ.7,000

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
உலகக் கோப்பை கிரிக்கெட்  அரையிறுதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. வரும் 30ம் தேதி மொகாலியில் நடக்கவிருக்கும் இப்போட்டியை எப்படியாவது கண்டு ரசிக்க  கிரிக்கெட் ரசிகர்கள் துடிக்கின் றனர். நுழைவுச் சீட்டுகள் பரபரப் பாக விற்பனையாகின்றன. பெரும் பாலும் கள்ள நுழைவுச் சீட்டுகளே கிடைப்பதாகப் புகார் எழுந்துள் ளது. ரூ.1,000-க்கான நுழைவுச் சீட்டை 7,000 ரூபாய் கொடுத்து ரசிகர்கள் வாங்குகின்றனர்.
இதுகுறித்து கள்ள நுழைவுச் சீட்டு விற்பவர் ஒருவர் கூறுகை யில், “அனைவருமே இந்த மோத லுக்காகத்தான் காத்திருந்தோம். இது இரு நாடுகளுக்கிடையில் நடக்கும் போருக்குச் சமம். ஆஸ்தி ரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றதும், டிக்கெட்டின் விலை பலமடங்கு அதிகரித்து விட் டது. தவிர, இது இன்னும் அதி கரிக்க வாய்ப்புள்ளது,’’ என்றார். இந்திய பிரதமர் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் கிலானி அவர்கள் வந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.மேலும் ஒருவர் டிக்கெட் கிடைக்காத காரனத்தினால் தமது ஒரு கிட்னியை கூட தருவதாகவும் தனக்கு டிக்கெட் தருமாறு கேட்கிறாராம்.மேலும் 1000 கோடி அளவில் பெட்டிங் நடப்பதாக தகவல் தெரிவிக்கின்றது, இந்தியா மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் போட்டி இன்று நடைபெறுவதால் மக்கள் பெறும் அளவில் எதிர் நோக்கி காத்திருக்கின்றனர், இந்தியா ஏமாற்றுமா, இல்லை வெற்றி பெறுமா பொறுத்து இருந்து தான் பார்ப்போம். உங்கள் பார்வை எப்படி வெற்றி பெறுமா உங்கள் பதிலில் பார்ப்போம்

1 comments:

Anonymous said...

வெற்றி இந்தியா