இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு சம்பவத்தில் அபினவ் பாரத் என்ற இந்து
அமைப்பை சேர்ந்த அசீமானந்தா குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி அஜ்மீர் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி தேசிய உளவுத்துறையிடம் இருந்து அவரை ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு படையினர் தங்களது பாதுகாப்பில் எடுத்து அஜ்மீர் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தினார்கள். அவரை 2 நாள் காவலில் வைத்து விசாரித்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து தீவிரவாத தடுப்புப்படையினர் அவரை தங்கள் காவலில் விசாரணைக்கு கொண்டு சென்றனர். நாளை மாலை மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
அசீமானந்தா ஏற்கனவே ஐதராபாத் மெக்கா மஜீத் குண்டு வெடிப்பில் கடந்த ஆண்டு சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டவர். 2008-ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கிலும் அவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 comments:
its good keep it up. go to visit my website too. www.sinthikkavum.net thank you
Post a Comment