Saturday, 8 January 2011

இஸ்ஸலாத்திற்க்கு மாறுபவரிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
லண்டன்: பிரிட்டனில் இஸ்லாத்தை தழுவுபவர்களின் தொகை
கடந்த ஆண்டை விட இரு மடங்காக அதிகரித்திருப்பதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது. மத நம்பிக்கை குறித்த ஆய்வு அமைப்பொன்று இஸ்லாத்தை தழுவுபவர்களின் தொகையை மதிப்பிடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இஸ்லாம் தொடர்பில் இங்கு அடிக்கடி எதிர்மறையான சிந்தனைகள் எழுப்பப்படுகின்ற போதும் ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் மக்கள் வருடாந்தம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதாக இவ் அமைப்பு தெரிவித்துள்ளது.
பிறக்கும் போது காணப்பட்ட மதம் அல்லது புதிதாகத் தழுவிக்கொண்ட மதம் என்பவற்றுக்கான வித்தியாசங்கள் குடிசன மதிப்பீட்டுத் தரவுகளில் உள்ளடக்கப்படாமையால் பிரிட்டனில் வேறு மதத்தைத் தழுவி வாழ்பவர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவது கடினமானதாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னர் மேற்கொண்ட மதிப்பீடுகளில் இஸ்லாத்தைத் தழுவுபவர்களின் தொகை 14,00025,000 காணப்பட்ட நிலையில் புதிய ஆய்வில் இத்தொகை ஒரு இலட்சத்தை எட்டுமெனத் தெரிவிக்கப்படுகிறது. 2001 இல் இஸ்லாத்தைத் தழுவிய 60,699 பேர் பிரிட்டனில் வசித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருடாந்தம் எத்தனை பேர் இஸ்லாத்தைத் தழுவுகிறார்கள் என்பதைக் கணக்கிடுவதற்காக ஆராய்ச்சியாளர்கள் பிரிட்டனிலுள்ள மசூதிகளை அணிகியுள்ளனர்.

0 comments: