Saturday, 25 December 2010

# தலாய் லாமாவை கடுமையாக வெறுக்கும் சீன அதிபர் ஜின்டாவோ : விக்கிலீக்ஸ்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பெர்லின் : சீனாவில் எப்படியோ, ஆனால், அரசை நிர்வகிக்கும்
கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவில் உண்மையான ஜனநாயகம் நிலவுவதாக கூறியுள்ள விக்கிலீக்ஸ், அனைத்து விவகாரங்களையும் இந்த பொலிட்பீரோதான் தீர்மானிக்கிறது. அதேசமயம், திபெத் மற்றும் தலாய் லாமா குறித்த விவகாரத்தை முழுமையாக கையாளுவது அதிபர் ஹூ ஜின்டாவோதான் என்றும் விக்கிலீக்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறி்த்து சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அனுப்பி வைத்த ரகசிய கடிதத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. சீனாவில் ஜனநாயகம் இருக்கிறதோ இல்லையோ. இந்த பொலிட்பீரோவில் முழுமையான ஜனநாயகம் விளங்குகிறது. மிக முக்கியப் பிரச்சினைகள் பொலிட்பீரோவில் வைத்துதான் முடிவெடுக்கப்படுகிறது. அனைத்து உறுப்பினர்களும் சம்மதித்தால்தான் எந்த ஒரு பிரச்சினைக்கும் ஒப்புதல் தரப்படுகிறது.

அனைத்துப் பிரச்சினைகளையும் பொலிட்பீரோ கவனித்தாலும் கூட திபெத் மற்றும் தலாய் லாமா குறித்த பிரச்சினையை அதிபர் ஹூ மட்டுமே கவனிக்கிறார். தலாய் லாமாவை மிகக் கடுமையாக வெறுப்பவர் ஹூ. அவரை ஒரு துரோகியாக ஹூ கருதுகிறார். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் யாரேனும் தலாய் லாமா குறித்து பரிதாபப்பட்டாலும் கூட அவர்களுக்கு வேலை காலியாகி விடும். அந்த அளவுக்கு தலாய்லாமாவை கடுமையாக வெறுப்பவர் ஹூ என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: