Sunday, 19 December 2010

வெங்காயம் விலை கிலோ ரூ.70 ஆக உயர்வு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அனைவரும் ஒருவரை திட்ட போடா வெங்காயம் என்று திட்டுவோம், இனி அப்படி திட்டாதீர்கள்
இன்று வெங்காயத்திண் விலை எங்கோ போகிறது ஏன் ??

சமீபத்தில் பெய்த மழை காரணமாகவும், விளைச்சல் குறைவு காரணமாகவும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பூண்டு விலையும், வெங்காயம் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. ஒரு கிலோ பூண்டு ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கிறது. சில்லரை விற்பனையில் இன்னும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
 
இதேபோல் பெரிய வெங்காயம் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்டு வந்த பெரிய வெங்காயம் இன்று ரூ.70-க்கு விற்கப்படுகிறது.
 
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மராட்டிய மாநிலத்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. தினமும் 60 லாரிகள் வீதம் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரும். அங்கு விளைச்சல் குறைந்து விட்டதால் இன்று 15 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வரத்து இருந்தது.
 
இதனால் வெங்காயம் கிலோ ரூ.70க்கு கோயம்பேடு மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் பெரிய வெங்காயம் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.
 
இந்த விலை ஏற்றத்தால் சாதாரண நடுத்தர மற்றும் ஏழை மக்கள் திகைத்துப்போய் உள்ளனர்.
 
வெங்காயம் விலை ஏற்றம் காரணமாக ஓட்டல் பண்டங்களின் விலையும் அதிகரித்து உள்ளது.

0 comments: