Wednesday 15 September 2010

அயோத்தியா தீர்ப்புக்கு பிறகு கலவரம் ஏற்படுமா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பெண் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
 
அயோத்தி இந்துக்களின் மதம் மற்றும் நம்பிக்கை தொடர்பான பிரச்சினை. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு இஸ்லாமியர்கள் தடையாக இல்லாமல் மத மாச்சரியங்களை மறந்து உதவ முன் வரவேண்டும்.
 
அயோத்தி தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும் என்பதில் எங்களுக்கு துளியும் சந்தேகம் இல்லை. தீர்ப்பு குறித்து இப்போது எதையும் கூற இயலாது. தீர்ப்பு வெளியான பிறகே எங்கள் கருத்தை தெரிவிக்க இயலும். தீர்ப்பு எப்படி வந்தாலும் சட்ட ரீதியாக அதை எதிர் கொள்ள தயாராக உள்ளோம்.
 
அலகாபாத் கோர்ட்டு தீர்ப்பு சாதகமாக இல்லை யென்றால் சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம். தீர்ப்பு வெளியான பிறகு எங்கள் தரப்பில் இருந்து எந்த பிரச்சினையும் உருவாகாது.
 
அயோத்தி விவகாரத்தை இரு மதங்களுக்கு இடையிலான பிரச்சினையாக நாங்கள் பார்க்கவில்லை. எந்த வகையிலும் சமூகத்தில் வேற்றுமை உருவெடுக்கக்கூடாது. எனினும் தொன்று தொட்டு இருந்து வரும் நமது தேசிய பாரம்பரியங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
 
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது உறுதி. அப்படி கட்டப்படுமானால் அது சமூக ஒருமைப்பாடு ஏற்பட ஏதுவாக அமையும்.
 
ராமர் கோவில் இயக்கம் பாரதீய ஜனதாவுக்கு பெரிதும் உதவுகிறது. என்றாலும் எங்கள் இயக்கத்தை வழி நடத்தி செல்வதற்கு வேறு யார் உதவியையும் நாங்கள் எதிர்பார்க்க வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

1 comments:

said...

nangal masjidhai katta edhir parkirom...........