Wednesday 1 September 2010

2011-ம் ஆண்டு தனது தலைமையில் புதிய கூட்டணி அமையும் ராமதாசின் காமெடி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
எதிர்வரும் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் எனது தலைமையில் புதிய கூட்டணி உருவாகும். அத்தேர்தலில் பாமக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 2011-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தனது தலைமையில் புதிய கூட்டணி அமையும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, மின் உற்பத்தி புரட்சி என பல்வேறு புரட்சிகள் ஏற்பட்டுள்ளன. இப்போது போதைப் புரட்சி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு 39 புதிய மதுவகைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. 4 புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. மக்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர்.

வேலூரில் 13 சட்டப் பேரவைத் தொகுதிகள், 8 வட்டங்கள் உள்ளன. இதனால் வேலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற அக்டோபர் மாதம் எனது தலைமையில் போராட்டம் நடைபெறும்.

2011-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் எனது தலைமையில் புதிய கூட்டணி உருவாகும். அத்தேர்தலில் பாமக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை.

சென்னை விமான நிலைய இடப் பிரச்னையில் நான் முட்டுக் கட்டை போடுவதாக கூறுகிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக நான் பேசினால் முட்டுக்கட்டை என்கிறார்கள். வெளிமாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸார் குரல் கொடுக்கிறார்களே அதை எப்படி அழைப்பது?

இலங்கையில் தமிழர்களுக்கு ஆட்சியில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும். இதன் மூலம்தான் தமிழர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்றார் ராமதாஸ்.
ராமதாஸ் எப்படி எல்லாம் அரசியல் காமெடி பண்ணுகிறார் உங்கள் கருத்து என்ன சொல்லுங்களேன் உங்கள் ஓட்டு எனக்கே

0 comments: