Sunday 22 August 2010

தமிழகத்தில் தேர்தல் சூதாட்டம் ஆரம்பம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

வரும் தமிழக சட்டசபை தேர்தல் வர விருப்பத்தால் தமிழகத்தில் அரசியல் சூதாட்டம்
ஆரம்பிக்கபடடுள்ளது, இதில் அ.தி.மூ.க மற்றும் திமுக பெரும் பங்கு வகிக்கிறது,
  சட்டசபை தேர்தலுக்கு வெறும் 8 மாதங்களே உள்ள நிலையில் மாநிலத்தின் இரண்டு முக்கிய கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தங்களது கூட்டணிகளை பலப்படுத்தும் முயற்சிகளில் முன்னெப்போதும் இல்லாத முனைப்போடு இறங்கியுள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசியலை பல வருடங்களாக உற்று நோக்கி வருபவரும், இரு கட்சிகளுக்கும் பொதுவானாவருமான ஒருவர் நம்மிடம் கூறும் போது, "வரப்போகும் தேர்தல் தான் திமுக, அதிமுக ஆகிய அமைப்புகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் தேர்தலாகும்.

ஏனென்றால், இதில் ஜெயித்தால் தான் தன் விருப்பப்படி ஸ்டாலினுக்கு முதல்வர் பதவியும், மற்ற வாரிசுகளுக்கு வேண்டியவற்றவையும் செய்யமுடியும் என்பதை  கருணாநிதி நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்.

அதேப்போல தொடர் தோல்விகளாலும், கட்சி மாறியவர்களாலும் துவண்டு போயுள்ள இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்க இந்த தேர்தலை விட்டால் வேறு மருந்தில்லை என்பதை ஜெயலலிதாவும் நன்றாகவே அறிந்து வைத்துள்ளார்.

எனவே இந்த வாழ்வா சாவா போட்டியில் ஒரு கை பார்த்துவிடலாம் என இரு கட்சித்தலைமைகளும் முடிவெடுத்துவிட்டதாகவே தெரிகிறது," என்றார். இதை உறுதிப்படுத்த கட்சி வட்டாரங்களில் நாம் விசாரித்த போது கிடைத்தத் தகவல்களும் அவரது கூற்றை மெய்ப்பிதாகவே இருந்தன.

திமுகவில் உள்ள விஷயமறிந்த வட்டரங்கள் நம்மிடம் பேசும் போது, "மூத்த தலைவர்கள் விரும்பாத போதிலும் பாமகவை கூட்டணியில் சேர்ப்பதையே முதல்வர் விரும்புகிறார். ஏனென்றால் திமுகவை ஆட்சியில் மறுபடி அமரவைப்பதற்காக எந்த 'காம்ப்ரமைஃஸ்' செய்துகொண்டாலும் தப்பில்லை என நினைக்கும் அவர், அவர்க்ளாகவே வலிய வரும்போது நாம் ஏன் விலகி செல்ல வேண்டும் என்னும்
மூடில் உள்ளார். காங்கிரஸை தக்க வைக்கவும் பல ராஜதந்திரங்க்ளை மனதில் வைத்துள்ளார்," என்றன.

அதிமுக நிலைமையோ இன்னும் மோசம். ஒரு காலத்தில் தான் 'குடிகாரர்' எனத்திட்டிய விஜயகாந்த் கட்சியோடு கூட்டணி வைக்க ஜெயலலிதா ரெடி என கூறும் அவரது க்ட்சியினர், "இந்த தேர்தலில் வென்று காட்ட என்ன வேண்டுமானாலும் செய்ய அம்மா தயார். தேமுதிக வருவது கிட்டத்தட்ட உறுதி. மேலும் சில பெரிய கட்சிகளும் வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அம்மாவின் அதிரடி ஆட்ட்த்தை இனிமேல் தான் பார்ககப்போகிறீர்கள்," என்றனர்.
அடுத்து வரும் காலங்களில்காட்சிகள் மாறலாம் என்று தெரிகிறது, பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும அனைவரும் 

0 comments: