Thursday 26 August 2010

தேர்வில் காப்பி அடித்த 5 நீதிபதிகள் இடைநீக்கம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஆந்திராவில் எல்.எல்.எம் தேர்வில் காப்பி அடித்த 5 நீதிபதிகளை இடைநீக்கம் செய்ய தலைமை நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ககதியா பல்கலைக் கழகத்தில் துணை நீதிபதி களுக்கான எல்.எல்.எம். தேர்வு நடந்தது. இதில் ஏராளமான துணை நீதிபதிகள் கலந்து கொண்டு முதலாண்டு எல்.எல்.எம். தேர்வை எழுதினார்கள்.

தேர்வை கண்காணிக்கும் பறக்கும் படை பிரிவு ஒன்று திடீரென்று பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்து சோதனை நடத்தியது. அப்போது 5 துணை நீதிபதிகள் “காப்பி” அடித்து பரீட்சை எழுதுவது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் 5 பேரும் உடனடியாக பரீட்சை எழுதுவது தடை செய்யப்பட்டது.

விசாரணையில், அவர்கள் 5 பேரும் மூத்த சிவில் நீதிபதி அஜித்சிம்காராவ், ரங்காரெட்டி மாவட்ட 2-வது கூடுதல் நீதிபதி விஜயேந்தர் ரெட்டி, அனந்த பூர் மாவட்ட மூத்த சிவில் நீதிபதி கிஷ்டப்பா, பட்லா பகுதி மூத்த சிவில் நீதிபதி சீனிவா சாச்சாரி, வாரங்கல் மாவட்ட கூடுதல் ஜூனியர் சிவில் நீதிபதி அனுமந்தராவ் என்று தெரியவந்தது.

இவர்கள் 5 பேர் பற்றி ஆந்திரா மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நிசார் அகமது கக்ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி நிசார் அகமது இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினார். அப்போது தேர்வை நடத்திய பல்கலைக்கழக அதிகாரிகள், முதல்கட்ட அறிக்கை கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் பரீட்சையில் காப்பி அடித்த 5 துணை நீதிபதிகளையும் உடனடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். நீதிபதிகள் புத்தகங்களை தேர்வு அறைக்குள் எப்படி எடுத்துச் சென்றனர் என்பது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு பல்கலைக்கழ கத்துக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே பரீட்சையில் காப்பி அடித்த 5 நீதிபதிகள் மீது பொதுக் தேர்வு சட்டம் 1997ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாரங்கல் மாவட்ட பார் அசோசியேசன் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் காப்பி அடிக்க உதவிகள் செய்த வாரங்கல் துணை நீதிபதி ரசாக் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாரங்கல் மாவட்ட வக்கீல்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

0 comments: